அன்புமணி ராமதாஸ் நின்றிருந்த மேடை சரிந்து விபத்து… ! வீடியோ !
மேடை திடீரென சரிந்ததால் எகிறி குதித்த அன்புமணி நல் வாய்ப்பாக காயம் இன்றி உயிர் தப்பினார். பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் கடந்த இரண்டு நாட்களாக சேலம் மாவட்டத்தில் கொடியேற்றும் விழா நிர்வாகிகள் சந்திப்பு விழா நடைபெற்று வருகிறது.
அதன் அடிப்படையில் இரண்டாவது நாளான இன்று சேலம் கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வாழப்பாடி பேருந்து நிலையம் பகுதியில் கொடியேற்று விழா நடைபெற்றது . இதற்காக அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு தலைவர் அன்புமணி ராமதாஸ் ஏறிய போது மேடை திடீரென சரிந்து விழுந்தது .
வீடியோ
ஏராளமான நிர்வாகிகள் அந்த மேடையில் ஏறியதால் பாரம் தாங்காமல் மேடை சரிந்தது. இதில் நல் வாய்ப்பாக அன்புமணி ராமதாஸ் , பாமக துணைத் தலைவர் தேவதாஸ் உள்ளிட்டோர் காயம் இன்றி உயிர் தப்பினார். தனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது .
மேடை சரிவதை உணர்ந்த அன்புமணி ராமதாஸ் மேடையில் இருந்து கீழே எதிறி குதித்து நல்வாய்ப்பாக காயம் இன்றி தப்பினார் . இதனையடுத்து தொடர்ந்து அந்த பகுதியில் அன்புமணி ராமதாஸ் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். இந்த மேடை சரிந்ததில் மூன்று சக்கர வாகனங்கள் சேதம் அடைந்தது.
– சோழன்தேவ்