பணத்திற்காக மண்டையை உடைத்த பாசக்கார நண்பர்கள்… கலக்கல் கடத்தல் சம்பவம்!

0

“யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு” என்ற திரைப்பட பாடல் ஒன்று உண்டு. நண்பன் ஒருவனை நம்பி உதவி செய்ததால் அதனால் ஏற்படும் விளைவுகள் பின்னாளில் தெரியவரும்போது ஏற்படும் மன உளைச்சல்களை படம் பிடித்து காட்டியதுதான் இந்த மதுரை சம்பவம்.

கடன் அன்பை முறிக்கும் என்பதற்கு இந்த சம்பவமே எடுத்துக்காட்டு. மதுரை சொக்கிகுளம் பகுதியில் பணத்திற்காக நண்பரையே காரில் கடத்திய இச்சம்பவத்தை அங்குசத்தின் சார்பில் விசாரிப்பதற்காக மதுரை தல்லாகுளம் காவல்நிலையம் சென்றோம். அப்போது இது பற்றி காவல்நிலைய காவலர் ஒருவர் கூறியது: மதுரை சுப்பிரமணிய புரம் பகுதியைச் சேர்ந்தவர் சகாதீன் என்பவர் பழைய கார் வாங்கி விற்கிற தொழிலை செஞ்சு வந்தாரு. இவருக்கு கடந்த 5 வருஷத்துக்கு முன்னாடி அமீர் என்பவர் மூலமா அண்ணாநகர் எஸ்எம்பி காலனி பகுதியில பிரியாணி கடை வச்சிருந்த ஆத்திப் என்பவரோடு பழக்கமானது. இவங்க ரெண்டு பேரும் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவங்கனால நெருங்கி பழகுனாங்க.

பிரியாணி கடை வைக்க சகாதீனிடம் கடனாக ரூ.30 ஆயிரம் பெற்ற ஆத்திப் அண்ணா நகர் அம்பிகா தியேட்டர் எதிரே தள்ளு வண்டியில் பிரியாணி தொழில் செஞ்சு வந்தாரு. சம்பவத்தன்று ஆத்திப் தனது வாகனத்தை தெப்பக்குளம் போலீசார் பிடிச்சுவிட்டதால அதற்கு ரூ 20 ஆயிரம் கொடுக்குமாறு மறுபடியும் சகாபுதீனிடம் கேட்டு பெற்றுள்ளார்.


பின்னர் கடனாக கொடுத்த பணத்தை சகாதீன் தனது செல்போன் மூலம் கேட்க இருவருக்கும் இடையே வாய்ச்சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமான சகாதீன் தனது காரில் மற்றொரு நண்பரான புரோக்கர் சாகுலுடன் மார்ச் 13ம்தேதி இரவு சின்ன சொக்கிகுளத்தில் உள்ள ஒரு டீக்கடைக்கு வந்தனர். அங்கு நின்று பேசிக்கிட்டிருந்தபோது அங்கு இரு பைக்கில் வந்த அப்துல் இம்ரான், அகில், ஆஷிக், முகமது, அனாஸ், ஹரி, வாசிம், திருமணி, செல்வம் ஆகியோர் வழிமறித்து உன்னிடம் பேச வேண்டும் என்று அரிவாளை எடுத்து காட்டியுள்ளனர்.

அவர்கள் வந்த வாகனத்தில் சகாதீன் ஏறியதும், அவரது கண்கள் இரண்டையும் கட்டி மாட்டுத்தாவணி அருகே உள்ள வளர் நகர் டக்கத்தான் ஏரி பகுதியில் ஆனந்த் என்பவர் வீட்டில் அடைச்சு வச்சாங்க. அப்புறம் சகாதீனின் மனைவிக்கு போனில் பேசி உன் புருஷனை நாங்க கடத்தி வைச்சிருக்கோம், 50 லட்சம் கொடுத்து உன் புருஷனை மீட்டுக்க இல் லேன்னா அவரை நாங்க கொன்னுடுவோம் என மிரட்டியிருக்காங்க.

இதைக்கண்டு பயந்து போன சகாதீன் மனைவி உடனடியாக உறவினர் களிடம் கூறி ரூ1 லட்சத்தை ஆத்தீப்பிடம் கொடுத்திருக்காங்க. பணத்தை வாங்கியதோடு சகாதீனை அரிவாளால் தலையில் வெட்டிவிட்டு, மதுரை ஜெய்ஹிந்துபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில இவர் வீட்டின் இரும்பு கேட்டில் முட்டிவிட்டதாக சொல்லி சேர்த்து இருக்காங்க. சகாதீன் தலையில் வெட்டு காயம்பட்ட இடத்தில் 13 தையல் போட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வர்றார்.


நாங்கள் கடத்தியதை வெளியில சொன்னா உன்ன கொன்னுடுவோம் என பயமுறுத்திய தோடு, சகாதீன் மனைவிக்கு போன் செய்து உங்க புருஷன“ இந்த மருத்துவமனையில் இருக்காருனு சொல்லிட்டு எல்லாரும் தலைமறைவாயிட்டாங்க.

தல்லாகுளம் காவல் ஆய்வாளர் பாலமுருகன்
தல்லாகுளம் காவல் ஆய்வாளர் பாலமுருகன்

சகாதீனின் வக்கீல் ஒருவர் கொடுத்த புகார்ல தல்லாகுளம் இன்ங்பெக்டர் பால முருகன் விசாரணை செஞ்சாரு. சம்பவம் நடந்த பகுதிகளில சிசிடிவி காட்சிகள், போன் உரையாடல்களை வைத்து குற்றவாளிகளை அடையாளம் கண்டுபிடிச்சாங்க. என்றார். இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தல்லாகுளம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர்.

தல்லாகுளம் காவல்உதவி ஆணையர் ஜெகன்நாதன்
தல்லாகுளம் காவல்உதவி ஆணையர் ஜெகன்நாதன்

இன்ஸ்பெக்டர் பாலமுருகனை பற்றி நாம் கேட்டபோது, சார் அவர் 99 பேச் 2012ல் திருநெல்வேலியில் இன்ஸ்பெக்டராக பதவி ஏற்றுக்கொண்டு 3 வருடங்களுக்குப் பிறகு மதுரைக்கு மாறுதலாகி திலகர் திடல், கரிமேடு, ஜெய்ஹிந்துபுரம், எஸ்.எஸ் காலனி, விளக்குத் தூண், செல்லூர் என சுற்றி இங்கு தல்லாகுளம் வந்து 1 வருடம் ஆகிறது. இங்கு இருக்கும் ரவுடிகளுக்கு முதலில் குண்டாஸ் போட்டார். இன்று வரை அவர்களால் வெளிவர முடியவில்லை. அப்போது இருந்த உதவி ஆணையர் சூரக்குமார் காவலர்களுக்கு நல்ல ஒத்துழைப்பு தந்தார். மதுரையில் உள்ள 16 சிட்டி காவல்நிலையங்களில் இதுதான் பெரியது.

காவல் உதவி ஆணையர் சூரக்குமாரன்
காவல் உதவி ஆணையர் சூரக்குமாரன்

மதுரையில் வேலை பார்த்து வந்த காவல்நிலையங்களில் இவரிடம் மிதி, அடி வாங்கி வந்தவர்கள் எல்லாம் இன்றைக்கு கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ளார்கள் இந்த ஆள் கடத்தல் பசங்க கேஸில் ஒரு சமூகத்தை சார்ந்த அமைப்பினர் வழக்கறிஞர்கள் காவல்நிலையத்திற்கு வந்தவர்கள் விஷயம் தெரிந்தவுடன் சத்தமில்லாமல் அமைதியாக சென்றனர். இந்த சகாதீன் ஆள் கடத்தல் விவகாரத்தில் 50 வட்சம் கேட்டு மிரட்டி அடைத்து வைத்து பணம் பறித்து தலையில் வெட்டி காயப்படுத்தியவர்களை விரைவாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்தோம் என்றார்.

-ஷாகுல், படங்கள் : ஆனந்த்

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.