திமுக ஒருபுறம் ; அதிமுக மறுபுறம் = பாமகவின் கூட்டணி அரசியல் !
பாமக நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது. ஆனால் அதிமுகவால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை, அதேசமயம் அதிமுக குறிப்பிடத்தக்க அளவிற்கு தொகுதிகளை பெறுவதற்கு காரணம் கொங்கு மண்டலமும், மேற்கு மண்டலமும் ஆகும். கொங்கு மண்டலத்தில் கவுண்டர்கள் ஓட்டை குறிவைத்து இபிஎஸ் பணிகளை மேற்கொள்ள, மேற்கு மண்டலத்தில் பெரும்பான்மையாக உள்ள வன்னியர் ஓட்டை பெறுவதற்கு பாமக பெரிதும் உதவியது.
இதனால் அதிமுக தலைமை பாமக-வோடு நட்புறவைப் பேண விரும்பி வருகிறது. ஆனால் பாமக தலைவர் ராமதாஸ் தேர்தலுக்குப் பிறகு திமுகவிற்கு ஆதரவாக பல்வேறு கருத்துக்களை பேசி வருகிறார். அதேசமயம் திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகனோடு அடிக்கடி தொலைபேசியில் உரையாடி வருகிறோம். இவை எல்லாம் தெரிந்த அதிமுக தலைமை பாமக-வோடு நீண்ட நாள் பயணம் செய்ய முடியாது இதனால் மேற்கு மண்டலத்தில் கட்சியின் வளர்ச்சியில் அதிகம் கவனம் செலுத்துங்கள் போது நடைபெற்ற தற்போது நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலிலும் மேற்கு மண்டலம் நமக்கு கை கொடுத்தது வரக்கூடிய தேர்தலிலும் அதை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் பாமக நமது கூட்டணியில் இல்லாவிட்டாலும் வெற்றி வாய்ப்புகளை எவ்வித குறையும் ஏற்படக் கூடாது என்று மேற்கு மண்டல கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூறி வருகிறதாம்.
இப்படி அதிமுகவின் கூட்டணி அரசியல் நாளுக்கு நாள் பல்வேறு மாற்றங்களை சந்தித்து வந்துகொண்டே இருக்கிறது. இவை ஒருபுறமிருக்க திமுக வரக்கூடிய உள்ளாட்சித் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகிறது, குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் செப்டம்பர் 15 க்குள் நடைபெற உள்ள 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட பல்வேறு மாவட்டங்கள் வருகின்றன. மேலும் இந்த பகுதிகளில் வன்னியர் ஓட்டுக்களே பெரும்பான்மையாக உள்ளது. அதேசமயம் வன்னியர் ஓட்டுக்கள் இன்று வரை பாமக தக்கவைத்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் நடைபெற உள்ள ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாமக அதிக அளவில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட ஆரம்பித்துள்ளது.
இந்த நிலையில் தான் திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் உடன் அடிக்கடி தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருக்கிறார். இந்த உரையாடலின் பயனாகவே திமுக பாமகவின் தற்போதைய நெருக்கம் நடைபெற்று வருகிறதாம். மேலும் திமுக வன்னியர்களின் இட ஒதுக்கீட்டுக்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் கலைஞர் படத்திறப்பு நிகழ்ச்சியை அதிமுக புறக்கணிக்க, அதிமுகவின் கூட்டணியில் பாமக பங்கேற்று முதல் வரிசையில் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இப்படி திமுக, பாமக உறவு நெருக்கமாக. அதேசமயம் அதிமுக, பாமக உறவு நாளுக்கு நாள் ஒரு விரிசலை சந்தித்து வருகிறது.
இவை அனைத்தும் வரவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல் தேர்தலையும் நகர்புறப் பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தலை கருத்தில் கொண்டு தான் நடக்கிறது என்று பேசப்படுகிறது.
அதேசமயம் பாமகவின் முக்கிய நிர்வாகி ஒருவர் கூறும்போது அதிமுகவுடனே வரக்கூடிய உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி தொடரும். நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சியில் மேற்கு மண்டலத்தில் அதிக இடங்களை கேட்டுப் பெற்று அதில் வெற்றி பெறுவோம். நகர்புற பகுதிகளுக்கான தேர்தல் வரும்போது மேற்கு மண்டலத்தில் கண்டிப்பாக மேயராக பாமக கைகாட்டும் நபர்தான் இருப்பார் என்று கூறினார். அதேசமயம் நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளதால் அதை பற்றி இப்போதே பேச வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறி பேச்சை நிறுத்தி விட்டார் அந்த பாமகவின் முக்கிய புள்ளி.