திருச்சியில் பப்ஜி கேம்+ டீன்ஏஜ் = தற்கொலை..

0

திருச்சியில் பப்ஜி கேம்+
டீன்ஏஜ் = தற்கொலை..

திருச்சியில் பப்ஜி கேம் விளையாட்டால் மதிப்பெண் மற்றும் ஒரே நாளில் இன்டர்நெட் டேட்டா குறைந்ததில் அப்பா கோபமா பேசியதும் அதை பொறுத்துக்கொள்ள முடியாமல்  மன உளைச்சலுக்கு ஆளான 11 – ஆம் வகுப்பு படித்துவந்த சௌடாம்பிகா பள்ளி மாணவன் உயிரிழப்பு.

திருச்சி சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சந்தாபுரம் ஐயப்பன் நகர் பகுதியை சேர்ந்த சங்கர் இவர் பருப்பு கார தெருவில் லாலா மிட்டாய் கடை எனும் ஸ்வீட் ஸ்டால் நடத்திவருகிறார். இவருடைய சொந்த ஊர் மதுரை திருச்சிக்கு வந்து குடியேறி சில வருடங்களே ஆகின்றன.

இந்நிலையில் இவருக்கு ஒரு மகள், ஒரு மகன் இருந்து வருகின்றனர்.

தற்கொலை செய்து இறந்து போன பால ஹரிநாத்

இளைய மகன் பால ஹரிநாத் (வயது-16), என்பவர் காட்டூர் அருகே உள்ள சௌடாம்பிகா பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வருகிறார்.

கொரோனா நோய் தொற்று காரணமாக பள்ளிகளில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் வீட்டில் இருந்த பால ஹரிநாத் அதிகமாக செல்போன்களை பயன்படுத்த கொஞ்சம் கொஞ்சமாக நாளடைவில் பப்ஜி எனும் விளையாட்டு கேம்மினை டவுன்லோட் செய்து விளையாட தொடங்கியுள்ளார். இதனால் படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலையில் பால ஹரிநாத் பள்ளியில் சமீபத்தில் நடந்து முடிந்த ஆன்லைன் டெஸ்டில் குறைவான மதிப்பெண் பெற்றதால், இன்று 8/8/2021 காலை பால ஹரி நாத்தின் தந்தை சங்கர் படிப்பதற்காக கொடுக்கப்பட்ட 5 GP நெட் முழுவதும் விளையாண்டு விட்டதாக கூறி கடுமையாக கோபம் கொண்டு பேசியுள்ளார்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவன் வீட்டினுள் இருந்த அறையை மூடிக்கொண்டு இருந்துள்ளார். வெகுநேரமாகியும் சாப்பிட கூட வெளியே வராமல் இருந்ததால் சந்தேகத்தில் பால ஹரியின் சகோதரி கதவைத் தட்ட திறக்காததால் பின்பு, கதவை உடைத்து பார்த்தபோது பால ஹரிநாத் தூக்கில் தொங்கியபடி இறந்து போய் கிடந்துள்ளார்.

பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சோமரசம்பேட்டை காவல்நிலைய போலீசார் உடலை மீட்டு உடல்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.

திருச்சியில் வீடியோ கேம் விளையாட்டான பஜ்ஜியின் மூலம் பல மாணவர்களின் உயிர் நாளுக்கு நாள் தூக்கிலிட்டு கொண்டிருக்கிறது. மூளைச்சலவை செய்யும் இந்த வீடியோ விளையாட்டினை தடை செய்தால் மட்டுமே பல உயிர்கள் இனி வரும் காலங்களில் தப்பும்,

கண்டோன்மெண்ட் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட திருச்சி கோர்ட் சாலையான ஜல்லிக்கட்டு சாலையில் மாலை ஏழு மணிக்கு மேல் கூட்டம் கூட்டமாக மாணவர்கள், இளைஞர்கள் இந்த பப்ஜி கேம்மிணை காரம் சாரமாக ஆங்காங்கே உட்கார்ந்து விளையாண்டு வருகின்றனர். இதில் அருகில் இருப்போரையும் கொச்சை வார்த்தைகளில் திட்டிக்கொண்டு விளையாடி வருகின்றனர்.

இதனால் அப்பகுதியில் செல்லும் சமூக ஆர்வலர்கள் வளரும் நாளைய சமுதாயத்திற்கு இது போன்ற விளையாட்டுகள் தேவையா? ஓடி விளையாட வேண்டிய வயதில் இப்படி மூளைச்சலவை செய்யும் விளையாட்டினால் அதிக மன உளைச்சல் ஏற்பட்டு ஒவ்வொரு நாளும் பலர் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே இது போன்ற நபர்களை பெற்றோர் கையில் எடுத்து கண்டிக்க முடியாத நிலையில், மக்களின் நண்பனான காவல்துறை கையில் எடுத்து தகுந்த பாடம் கற்றுக் கொடுக்க வேண்டி சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

இந்தர்ஜித்

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.