அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

மனமகிழ் மன்றத்தை அகற்றக்கோரி பாமக கோரிக்கை மனு !

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு மனு அளித்தனர்.
அப்போது திருச்சி தெற்கு மாவட்ட பாமக செயலாளர் பி கே திலீப் குமார் தலைமையில் நிர்வாகிகள் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
திருச்சி காந்தி மார்க்கெட் தஞ்சை ரோடு பால்பண்ணை அருகில் உள்ள எம்பி என்ற மனமகிழ் மன்றம் சட்டத்துக்கு புறம்பாக செயல்படுகிறது என்று 14 10 2022 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் மனு வழங்கப்பட்டது. அதில் கலால் ஏசி அவர்கள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து அதன் நகலும் எங்களுக்கு கிடைக்கப்பெற்றது. எந்த ஒரு மது பாட்டிலிலும் விலை MRP கிடையாது. இன்று வரை அந்த மனமகிழ் மன்றம் முழுக்க டாஸ்மாக்காக 24 மணி நேரமும் 100 ரூபாய் அதிக விலை வைத்து விற்று வருகிறார்கள். தற்போது 20 குண்டர்களை வைத்து மனமகிழ் மன்றம் நடத்தி வருகிறார்கள்.

மேலும் மன மகிழ் மன்றத்தில் பார் நடத்தக் கூடாது என்றும் உறுப்பினர்களுக்கு மட்டும் பெக் அளவில்தான் மது விற்க வேண்டும் என்றும் மனதை மகிழ வைக்கும் விளையாட்டு சாதனங்கள் தான் இருக்க வேண்டும் என்றும் வெளியில் இருந்து வருபவர்களுக்கு மது பாட்டில்களை விற்கக் கூடாது என்றும் நாம்ஸ் உள்ளது. அதை மீறி 20 குண்டர்கள் 20 பார் ஊழியர்கள் என்று வைத்து 40 பேருக்கு தல ஆயிரம் என்றாலும் 40 ஆயிரம் ரூபாய் ஒரு நாள் சம்பளம் கொடுக்கப்படுகிறது.

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

மேலும் எடுத்து வாடகை கரண்ட் பில் என்று கணக்கு வைத்தாலும் ஒரு நாளைக்கு ஒரு லட்சத்துக்கு மேலாக பொதுமக்களிடம் இருந்து ஒரு பாட்டிலுக்கு 100 அதிக விலையாக வாங்கி வருகிறார்கள். அதற்கு அனைத்து தரப்பு அதிகாரிகளும் கையூட்டு வாங்கி முழு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்கள். இதை கண்டித்து பொதுமக்களை திரட்டி வரும் 27 ம் தேதி அன்று சனிக்கிழமை மாபெரும் போராட்டம் நடத்தப் போகிறோம் என்று இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்நிகழ்வில் பாமக மலைக்கோட்டை பகுதி செயலாளர் முருகானந்தம், நிர்வாகிகள் விஜி, பிரவீன், சரவணன், ஆகாஷ், ரங்கா, தினேஷ், லோகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். பி.கே.திலிப்குமார் மாவட்ட செயலாளர் பாட்டாளி மக்கள் கட்சி மனு வழங்க பட்டது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.