பல்வேறு பகுதியில் கஞ்சா விற்பனை ! அதிரடி கைது நடவடிக்கையில் போலீசார்!
திருச்சி ரயில்வே ஜங்ஷன் ரவுண்டானா அருகே புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக கண்டோன்மெண்ட் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதிக்கு ரோந்து சென்றனர். பின்னர் அங்கு புகையிலை பொருட்கள் விற்றுக் கொண்டிருந்த பாலக்கரை ஹீபர் ரோடு பகுதியை சேர்ந்த நிதீஷ் குமார் வயது 27 என்பவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் எடமலைப்பட்டி புதூர், கே.கே.நகர், தில்லை நகர் ஆகிய போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் புகையிலைப் பொருட்கள் விற்றதாக எடமலைப்பட்டி புதூர் துளசி நகரை சேர்ந்த சிமோன் ஜெரால்ட் (47), சலாவுதீன் (72), 68 வயது மூதாட்டி , தென்னூர் பகுதியை சேர்ந்த லியாக்கத் அலி (49) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 180 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி அரியமங்கலம் சிவகாமி அம்மையார் தெரு அருகே போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக அரியமங்கலம் போலீசருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார் அப்பகுதிக்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு போதை மாத்திரைகள் விற்றுக் கொண்டிருந்த அரியமங்கலம் தீப்பெட்டி கம்பெனி இரண்டாவது தெருவை சேர்ந்த ஷாகிர் உசேன் வயது22, திருவெறும்பூர் கருணாநிதி தெருவை சேர்ந்த அமீருதின் 20 ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 18 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் உறையூர் அம்பிகா தோப்பு பகுதியில் போதை மாத்திரைகள் விற்றதாக உறையூர் பாண்டமங்கலம் பகுதியை சேர்ந்த உசேன் பாட்சா 26 என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி ராம்ஜிநகர் சேக் மைதீன் காலனி பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 68). இவர் டைல்ஸ் கம்பெனியில் லோடுமேனாக உள்ளார். அதே கம்பெனியில் லாரி டிரைவராக தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அழகுதுரை என்பவர் வேலை பார்த்து வருகிறார். கடந்த 3-ந்தேதி சண்முகம் டைல்ஸை இறக்குவதற்காக அழகு துரையுடன் லாரியில் சென்றார். பின்னர் அங்கிருந்து மற்றொரு இடத்திற்கு புறப்பட்டபோது அழகு துரை லாரியை கவனக்குறைவாக ஓட்டி மரத்தின் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் லாரியின் கதவு சண்முகத்தின் காலின் மீது மோதியது. இதில் காலில் பலத்த காயம் அடைந்த சண்முகம் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து சண்முகம் கொடுத்த புகாரின் பேரில் அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து அழகு துரையை கைது செய்தனர்.
திருச்சி ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று அங்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்த ஸ்ரீரங்கம் ஜே ஜே நகர் பகுதியை சேர்ந்த பிரசாத் (வயது 19) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல் எடமலைப்பட்டி புதூர் , அரியமங்கலம், கோட்டை , உறையூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்ததாக காந்திநகர் பகுதியை சேர்ந்த அருள்குமார் (50, )அரியமங்கலம் மலையப்பா நகரை சேர்ந்த மதன்( 43), சிந்தாமணி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த குரு (25 ), காந்தி மார்க்கெட் ஜெயில் பேட்டை பகுதியை சேர்ந்த வினோத்குமார் (25) ஆகியோரை போலீசார் கைது செய்தனர் இதே போல் ராம்ஜி நகர் பகுதியில் கஞ்சா விற்ற திருவெறும்பூர் கைலாசபுரம் பகுதியை சேர்ந்த சையது இப்ராஹிம் ஷா (30) என்பவரை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து மொத்தம் 146 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.