ஏழை பெண்களின் இரத்தம் உறுஞ்சும் அட்டை மகளிர் சுய உதவித்குழு ”தொடா்-2” அந்த பெண் LIC ஏஜெண்ட் என்பதால் கட்டாயமாக 15 வருடம் பாலிசி எடுத்தாகவேண்டும். வருடம் 5000 ரூபாய்… அடுத்த இடி,
சுழல்நிநி மற்றும் ஆதார நிதியினை அடுத்த அடுத்த வருடம் பாலிசிடியூவாக கட்ட வேண்டும் என்பது. இது ஏழை பெண்களின் இரத்தம் உறுஞ்சும் அட்டையின் செயல்பாடு. சரி சூழல் நிதி அல்லது ஆதார நிதி மற்றும் உள்கடன் என்றால் என்ன ? அதனை திருடுவதால் வரும் பாதிப்பு என்ன!? என்று பார்ப்போம் !!! மகளிர் சுய உதவி குழுவின் உள்கடன் என்பது என்ன ?
முறையாக அரசாங்கம் பதிவு செய்த மகளிர் குழு ஆரம்பித்த மூன்று முதல் ஆறாவது வாரத்தில் அரசாங்கம் சுழல் நிதியாக தற்சமயம் ஆதார நிதி என்ற பெயரில் அரசாங்கம் 15,000 தருகிறது. இதை திருப்பி செலுத்த வேண்டாம் இந்த நிதியோடு குழு உறுப்பினர்களின் சந்தா பணத்தையும் சேர்த்து அவர்களுக்குள் அவர்களே கடன் கொடுத்து ஒரு ரூபாய் வட்டியோடு திருப்பி வாங்கி குழு வங்கி நிதியில் சேமிப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். இதுவே உள்கடனாகும்.
உதாரணமாக நான் சேர்ந்துள்ள குழுவில் உறுப்பினர் மாத சந்தா 250 ரூபாய் சந்தா 13 உறுப்பினர். 13×250-3250 (மாதம்), 12 மாதம் 12×3500-39,000, 39,000+15000 = 54000 ஒரு வருடத்தில் இருக்கும் (இதையும் சேர்த்து நீங்கள் LIC policy கட்டுவிடுறீர்கள்)
ஒரு வருடம் முடிவில் நீங்கள் லோன் கேட்டால் உங்கள் சேமிப்பில் இருந்து ஆறு மடங்கு அரசு வங்கி மூலமாக லோன் உங்களுக்கு கிடைக்கும். அதாவது 54000×6=3,54,000 கிடைக்கும் இன்னும் கூடுதலாக வாங்கி சேமிப்பை காட்டினால் கூடுதலாகவே கிடைக்கும். இந்த லோனுக்கான வட்டி வெறும் 70 பைசா தான். இதிலும் முறையாக அந்த தேதியில் கட்டிவிட்டால்வட்டியிலும் மானியம் உண்டு
இந்த கடனை நீங்கள் அடைத்து விட்டால் தொழில் கடனாக வங்கியே முன்வந்து ஒவ்வொரு குழு உறுப்பினருக்கும் தொழில் கடனாக 1,00,000 லட்சம் 300 ரூபாய் வங்கி சேவை மற்றும் பிரதமந்திரி காப்பீடான PMJJBY PMSBY இரண்டிற்கும் 300+436-756 மட்டும் பிடித்துக்கொண்டு 99, 244 உங்கள் அக்கவுண்டில் ஏறிவிடும் லோனுக்கு உதவி செய்தவர் (முறையாக இல்லாமல்) எனக்கு பணம் கொடுங்க என்று கேட்டால் கூட 1000 மேல் கேட்க மாட்டாங்க… அதைக்கூட மன்னிக்கலாம். இந்த தொகையையும் முதல் முறையாக SC என்றால் 50% மானியம் உண்டு. வெறும் 50,000 திருப்பி கொடுத்தால் போதும் இதை முறையாக கடன் தொகையை கட்டிவிட்டால் நீங்களாகவே வங்கியில் அடுத்தடுத்த லோன் கேட்க முடியும் வங்கியே உங்களை அணுகி அடுத்த லோன் வாங்கிக் கொள்ளுங்கள் என்று அழைத்து கொடுக்கும்.
நாம் வங்கிக்கு தரவேண்டியது நம்பிக்கை மட்டுமே… அந்த நம்பிக்கை என்பது குறிப்பிட்ட தேதியில் கடனை அடைப்பது. இதில் நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டியது வங்கி கடனையும் அடைத்திருப்பீர்கள் கூடுதலாக உங்கள் ஆண்டு சந்தாவும் உயர்ந்திருக்கும் உங்கள் உள்கடனும் வளர்ந்திருக்கும்.
உதாரணமாக வருடம் ஆண்டு 54,000 ரூபாய் . அப்படியே வட்டியும் முதலுமாக வளரும்… 10 வருடம் குழு நடத்தியிருந்தார்கள். 54,000*10=5,40,000 கூடுதலாக வட்டி என்று குறைந்தது 6,00,000 சேமிப்பு என்று இருக்கும். அதை எப்போது வேண்டும் என்றாலும் வங்கியில் குறைந்தது 50,000 மட்டும் வைத்துவிட்டு சமமாக பிரித்து கொள்ளலாம்.. இந்த 6 லட்சத்தையும் கூடுதலாக உங்கள் பணத்தையும் சேர்த்து கொடுத்துதான் நீங்கள் LIC வருட பிரிமியம் கட்டி இருக்குறீர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.
(கொடுமைகள் தொடரும் )
– காவியா சேகரன்.
இதை படிப்பதற்கு முன்பு முதல் தொடர் – 1 முதலில் படித்து விடுங்கள் !
அந்த தொடருக்கான லிங்
[…] ஏழை பெண்களின் இரத்தம் உறுஞ்சும் அட்ட… […]