புழுவிற்கு ஏமாந்து தூண்டிலில் மாட்டிக்கொள்ளும் நிலை ! மகளிர் சுய உதவிக்குழு மாபெரும் மோசடி ! தொடா் – 03

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ந்த திட்டத்தை அரசு கொண்டு வந்ததன் நோக்கம், பெண்களின் ஏழ்மை நிலையை ஒழித்து பொருளாதார வளர்ச்சிக்கு உதவ வேண்டும்  என்பது மட்டுமே. கந்து வட்டி வாங்கிவிட்டு ஓடி ஒளிய வேண்டாம் என்பதற்காக மட்டுமே. இந்த பிரச்சினையில் எந்த சிக்கிலில்லை என்பது மகளிருக்கு மட்டும் .

நீங்கள்  வாங்கிய லோனில் எத்தனை இடத்தில் ஏமாற்றபட்டிருக்கிறீர்கள் என்று சொல்கிறேன் .

அங்குசம் இதழ்.. இலவசமாக படிக்க...

1.டெப்பாசிட் என்ற முறையில் 5000 ரூபாய்… நம்மிடம் ஒரு வருட சந்தாவே போதுமானது.  பிறகு எதுக்கு 5000 ரூபாய்?

2.LIC 5000.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

3.கமிஷன் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு தொகை. நச்சலூரில் 5000. எனக்கு 2500. உங்களுக்கு 1700.

4.34,000 வருட சந்தா ஒவ்வொரு வருட பிரிமியம் கட்ட கூடுதலாக உங்கள் கைக்காசை 1500 சேர்த்து கட்டவேண்டும். அதன் படி ஒவ்வொரு ஆண்டும் 5000 ஏமாற்றப்படுகிறீர்கள்.

5 . உங்கள் கையில் ஒரு லட்சம் லோனிற்கு 83000 முதல் 85000 வரை மட்டுமே கிடைத்துள்ளது.

நீங்கள் கடனை அடைக்கும் போது 1,00, 000 லட்சத்திற்கும் வட்டியோடு கட்டியாக வேண்டும். ஆக, நீங்கள் வாங்காத 15,000 ரூபாய்க்கும் வட்டியோடு சேர்த்து நீங்கள் தான் அடைத்ததாக வேண்டும் .

  1. உங்களிடம் எந்த சேமிப்பும் இல்லாததால் ஒவ்வொரு முறையும் LIC policy, கமிஷன், டெபாசிட் கொடுத்தாக வேண்டும். இன்னும் அவர் வேறு எதை கேட்டாலும் கொடுத்தாக வேண்டும். இதை தட்டி கேட்டேன் என்பதற்காக என் வீட்டு பத்திரத்தை பிணையம் கேட்டவர் நாளை எதையும் கேக்கலாம் .
  2. இது முறையான குழு இல்லை என்பதால் அரசு சலுகைகள் கிடைக்காது. அரசு கொண்டு வரும் எந்த சலுகையும் கிடைக்காமல் போகும்.
  3. கிராம நகர வளர்ச்சி திட்டத்தின் மூலமாக வரும் எந்த அரசு சார்ந்த வேலை என்றாலும் முறையான குழுவில் நீங்கள் உறுப்பினராக சேர்ந்து இருக்க வேண்டும் அப்படி இல்லை என்றால் இது கிடைக்காமல் போகும்.

உதாரணமாக காலை உணவு திட்டத்தில் மகளிர் குழுவில் உள்ளவர்களுக்கு மட்டுமே வேலை கொடுத்தார்கள்.  நாளை 100 நாள் வேலையும் கூட மகளிர் குழு மக்களுக்கு மட்டும் என வந்தாலும் வரலாம் .

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

9.நான் கடன் வேண்டாம் என்று சொன்னபோது வேறு வழியே இல்லை.. வாங்கித்தானாக வேண்டும் வாங்கி கொடுங்கள் யாராவது எடுத்துக் கொள்ளட்டும். இல்லை பிரித்துக்கொள்கிறோம் என்றார்கள்.

சரி அப்படியே நான் கொடுத்திருந்தால் வரும் பிரச்சினை :

  1. அவர் பணம் கட்டாமல் ஏமாற்றி விட்டால் நான் தான் கட்டியாக வேண்டும்.
  2. அவர் குறிப்பிட்ட தேதிக்குள் கட்டத் தவறினாலோ அல்லது தாமதமாக கட்டினாலோ, என்னுடைய சிபில் ஸ்கோர் பாதிக்கும் . நாளை என் மகன் மகள் ஏதாவது லோன் வாங்கி தொழில் செய்யவோ அல்லது கல்வி கடனோ வாங்க முடியாது. அவர்களையும் சேர்த்து பாதிக்கும் .

இப்படி பல விசயங்கள் பிரச்சினையாக உள்ளது என்று சொன்னால், சில அதி மேதாவிகள், “லோனு என்று அலையுறாளுக … அவளுக வயிற்று வலிக்கு போய் விழுறாளுக …  அப்புறம் குத்துது குடையிதுனு பேசுவாளுக …யாரு உங்கள கூப்பிட்டு லோன் கொடுத்தாங்க ? கஷ்டப்பட்டு உருவாக்கிய குழு …” இப்படியாக தவறுக்கு நியாயம் கற்பிக்கிறார்கள்.

அவர்கள் ஏமாற்றவில்லை ஏமாற்றப்படுகிறார்கள். இன்றைய நவீன பொருளாதார சூழ்நிலையில், புழுவிற்கு ஏமாந்து தூண்டிலில் மாட்டிக்கொள்ளும் நிலை. மக்களே அவர்கள் ஏமாற்றவில்லை; ஏமாற்ற பட்டுள்ளார்கள். அவர்களின் ஏழ்மையை அறியாமையையும் பணத்தேவையை பயன்படுத்தி ஏமாற்றப்பட்டு கொண்டு உள்ளீர்கள்.

இதை உங்களுக்கு எடுத்து கூறுவதால் வங்கி விழிப்புணர்வு கொடுக்கும் என் வேலையை விட்டு தூங்கி விடுவார்கள் என்று  எனக்கு தெரியும் . அதோடு நான் செய்யும் அரசு துறைச் சார்ந்த வேலையிலும் கூட ஓரங்கட்டப்படலாம். அல்லது எனக்கு கிடைக்கும் வாய்ப்பை வேறு ஒருவருக்கு கொடுக்கலாம். ஆனால், இந்த மோசடிகள் எனக்கு தெரியாத வரை பிரச்சினை இல்லை.  தெரிந்தபின் என் மனசாட்சிக்கு விரோதமாக என்னால் கண்ணை மூடி இருக்க முடியாது. இதனால் ஏற்படும் பாதிப்பு எனக்கு மட்டுமானதாகவே இருந்துவிட்டு போகட்டும். பெண்களே … மக்களே … விழித்துக் கொள்ளுங்கள் !

கொடுமைகள் தொடரும் ….

 

— காவியா சேகரன்.

இதை படிப்பதற்கு முன்பு முதல் தொடர் – 2  முதலில் படித்து விடுங்கள் ! 

அந்த தொடருக்கான லிங் 

ஏழை பெண்களின் இரத்தம் உறுஞ்சும் அட்டை மகளிர் சுய உதவித்குழு ”தொடா்-2”

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.