அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

என்னது ”கண்”ணில் பிரஷரா? பார்வையை பறிக்குமா?

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

”சும்மா பிரஷர் ஏத்தாத” நம்மில் பலர் இப்படி ஒரு டயலாக்கை பரவலாக கேட்டிருக்கிறோம். மனது மட்டுமா, அழுத்தத்துக்கு ஆளாகும். இல்லை, இல்லை சில வேளைகளில் கண்களும்கூட, அழுத்தத்துக்கு ஆளாக நேரிடலாம் விழிப்புணர்வோடு இருக்க வேண்டியது அவசியம் என எச்சரிக்கிறார், திருச்சி ஜோசப் கண்மருத்துவமனையின் மருத்துவர். ரேமா கேத்ரீன் (M.S). அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

கண்களும் அழுத்தத்துக்கு ஆளாகுமா?

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

நிச்சயமாக. பொதுவில், நமது கண்களில் உள்ள நீர் (INTRAOCULAR TENSION/ INTRAOCULAR PRESSURE) 10 – 21 mm Hg வரை இருக்க வேண்டும். இந்த அழுத்தம் ஒவ்வொருவரை பொறுத்து வேறுபடும். எப்பொழுது கண்களில் உள்ள நீர் அழுத்தம் அதிகரித்து, கண்ணின் பார்வை நரம்பை குளோகோமா (OPTIC NERUE ) பாதிக்கிறதோ, அதை குளோகோமா என்கிறோம். இந்த கண் நீர் அழுத்தத்தால் நிரந்தர பார்வையை இழக்க வாய்ப்பு உண்டு. இது அமைதியாக பார்வையை பறிக்கும் அபாயத்தை கொண்டது.

எந்த வயதினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?

யாவரும் கேளீர்

குளோகோமா-வுக்கு வயது வித்தியாசம் எல்லாம் கிடையாது. பிறந்த குழந்தை முதல் அனைத்து வயதினரையும் இந்நோய் பாதிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக, 40 வயதுக்கு மேற்பட்டோர், உடலில் நீரழிவு நோய், இரத்த அழுத்தம் உள்ளவர்கள்;  குடும்பத்தில் யாருக்காவது ஏற்கனவே இந்நோய் (HEREDITARTY CAUSE) இருந்தால்; ஸ்டீராய்டு மருந்துகள் அதிகம் பயன்படுத்துகிறவர்; மற்றும் கண் சொட்டு மருந்து, மாத்திரை, இன்ஹேலர்ஸ், அல்லது நீண்ட காலம் பயன்படுத்துகிறவர்களுக்கு இந்நோய் வர வாய்ப்புள்ளது.

ரேமா கேத்ரீன்
ரேமா கேத்ரீன்

சரி, இந்த பாதிப்பை எப்படி தெரிந்து கொள்வது?

திறந்த கோண குளோகோமா (PRIMARY OPEN ANGLE GLAUCOMA) மிகவும் பொதுவாக காணப்படும் வகை, மெதுவாக பார்வை நரம்பை பாதிக்கும். PRIMAY ANGLE CLOSURE CLAUCOMA என்பது, திடீர் கண் வலி, சிவப்பு, மங்கலான பார்வை போன்ற அறிகுறிகளுடன் அவசர சிகிச்சை தேவைப்படும் வகை. CONGENITAL / DEVELOPMENT GLAUCOMA என்பது குழந்தைகளில் காணப்படும் அரிதான வகை. இரண்டாம் நிலை குளோகோமா (SECONDARY GLAUCOMA)  என்பது கண்களில் காயம், அழற்சி, ஸ்டீராய்டு பயன்பாடு அல்லது பிற கண் நோய்களால் ஏற்படும் பாதிப்பு என இதிலும் பல வகைகள் உண்டு.

இனிகோ இருதயராஜ் பிறந்தநாள்

ஆனாலும், பொதுவாக இந்நோயை (SILENT KILLER OF SIGHT) என்று கூறுவோம். எந்த ஒரு அறிகுறிகளும், இல்லாமலே இருக்கலாம் அடிக்கடி தலைவலி, கண்களில் அளவுக்கு அதிகமாக நீர் வடிதல், கண்களில் திடீர் சிவப்பு, திடீர் வலி, பார்வை தீடிரென மங்குதல், விளக்குகளை அல்லது ஒளிகளைச் சுற்றி வளையம் போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக கண் மருத்துவரை அணுகுவது அவசியம்

எந்த ஒரு அறிகுறிகளும் இல்லாமலே, இருந்தால்?

கண்களில் எந்தவொரு ஒவ்வாமை தொந்தரவு இல்லை என்றாலும்கூட, வருடத்திற்கு ஒரு முறையாவது கண் மருத்துவரை சந்தித்து கண்நீர் அழுத்தத்தை பரிசோதித்துக் கொள்ள வேண்டும். குடும்பத்தில் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, தங்கை என யாரில் ஒருவருக்கேனும் இப்படி ஒரு பாதிப்பு இருந்தாலும் அவர்களோடு தொடர்புடைய இரத்த உறவுகள் குளோகோமா பரிசோதனை செய்து கொள்வது மிக அவசியம். கண்டிப்பாக, அலட்சியம் வேண்டாம்.

ஜோசப் கண் மருத்துவமனை
ஜோசப் கண் மருத்துவமனை

இப்படி அச்சமூட்டுகிறீர்களே, இதற்கு தீர்வு இருக்கிறதா?

நிச்சயமாக, பார்வையிழப்பை தடுக்க வேண்டுமென்ற நோக்கில், நமது ஜோசப் கண் மருத்துவமனை குளோகோமா நோய் பாதிப்பை தீவிரமாக அணுகிவருகிறது. அதிநவீன சிகிச்சை முறைகளையும் கொண்டிருக்கிறது.

பொதுவாக, கண் அழுத்தத்தைக் குறைக்கப் பயன்படும் முதல் கட்ட சிகிச்சை  முறையாக, கண் சொட்டு மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. அடுத்தகட்ட பாதிப்புகளை, லேசர் சிகிச்சை (LASER THERAPY) யின் மூலம் சரிசெய்யலாம். Selective Laser Trabculoplasty (SLT), Argon Laser Trasbulopdasty (ALT), YAG Laser peripheral Iridotomy (LPI) என்பதாக, இதிலும் பல மருத்துவ உத்திகள் இருக்கிறது. இதுதவிர தீவிர பாதிப்பை சரிசெய்ய Trabeculectomy, Glucoma drainage devices MICS (Minimally Invasive Glaucoma surgery) போன்ற சிகிச்சை முறைகளும் நமது ஜோசப் கண் மருத்துவமனையில் செய்து வருகிறோம்.

இங்கே ஒரு விசயத்தை அழுத்தமாக பதிவு செய்ய விரும்புகிறேன். குளோகோமா பாதிப்பால் இழந்த பார்வையை நிச்சயமாக மீட்டெடுக்க முடியாது. ஆனால், தொடக்கத்திலேயே அதனை கண்டறிவதன் மூலம் பார்வை இழப்பை உறுதியாக தடுக்க முடியும்.

வெறும் 200 ரூபாய் இருந்தாலே போதும். நமது மருத்துவமனையிலேயே கண் பரிசோதனையை செய்து கொள்ளலாம். ஆண்டுக்கு 200 ரூபாய் பெரிய தொகை ஒன்றுமில்லையே. குளோகோமா விசயத்தில் அலட்சியம் வேண்டாமே?

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.