அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

பிரதமர் எப்போதும் பாதி உண்மையை மட்டுமே பேசுகிறார் – பிரியங்கா காந்தி !

திருச்சியில் அடகு நகையை விற்க

தொகுதி மறுவரையறை மசோதா தாக்கலின்போது, மக்களவையில் பிரியங்கா பேசிய விவகாரங்கள் கவனத்தை பெற்றிருக்கிறது. அவர் பேசியது, “ இந்திய தேசிய காங்கிரஸ் மகளிர் பாதுகாப்பு மற்றும் இட ஒதுக்கீட்டிற்கு உறுதியாக ஆதரவளிக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இருக்கக்கூடாது. மேலும் தொடர்ந்து அவ்வாறே செயல்படும். இந்த மசோதாவில் அரசியல் உள்ளது. குறிப்பிட்ட பிரிவினரின் கவலைகள் பின்னர் சரி செய்யப்படும் என பிரதமர் சாதாரணமாக கூறுகிறார்.

எந்த பிரிவினரை அவர் சொல்கிறார். அவர் ஓபிசி பிரிவினரை சொல்கிறார். அவர்களின் பிரச்சினையை பிறகு பார்ப்போம் என சொல்கிறார். அதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

இது தொழில்நுட்ப பிரச்சினை என சொல்வதன் மூலம் இந்த விவகாரத்தை ஓரங்கட்ட முயற்சி நடக்கிறது.

பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி

2026 யாவரும் கேளீர் ஏப்ரல் மாத இதழ்

அவர்களின் தேவையையும் கோரிக்கையையும் நாங்கள் எழுப்புகிறோம். ஆனால், அதனை தொழில்நுட்ப பிரச்சினை என பிரதமர் சொல்கிறார். மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை கூட்டப்படுவது குறித்து அரசியல் திருத்த மசோதா மீதான நடவடிக்கைகளின் போது எதுவும் கூறப்படவில்லை.

அமைப்புகள் மீது அழுத்தம் கொடுப்பதன் மூலம் ஜனநாயகத்தை அழிக்கும் பணியை அரசு துவங்கி உள்ளது. தற்போது ஜனநாயகத்தின் மீது நேரடி தாக்குதல் தொடுக்கப்பட்டு வருகிறது. பிரதமர் எப்போதும் பாதி உண்மையை மட்டுமே பேசுகிறார்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

எதிர்க்கட்சிகள் உள்ளன எனக்கூறும் பிரதமர், யார் உண்மையில் எதிர்க்கிறார் எனக்கூறவில்லை. எதிர்ப்பு உள்ளது எனக்கூறும் அவர் யார் எனக்கூறவில்லை. ஆனால், உண்மையில், பாஜக தான் எதிர்ப்பு தெரிவிக்கிறது.

2019 ல் மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடந்த 2018 லேயே ராகுல் கடிதம் எழுதினார். ராகுலை சாதாரணமாக எடுத்துக் கொண்ட பிரதமர், ஆனால், அவரது வார்த்தைகளை தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், இன்று இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்து விவாதித்து வருகிறோம்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

பிரதமர் இன்று ஆற்றிய உரையின் மூலம் மகளிருக்கான இடஒதுக்கீட்டிற்கு மிகப்பெரிய ஆதரவாளராக பாஜக மட்டுமே திகழ்ந்து வருவதை போன்று பிம்பம் உருவாக்கப்பட்டுள்ளது. மகளிர் இட ஒதுக்கீட்டுக்கான அங்கீகாரத்தை நாங்கள் கோரவில்லை என்று அவர் கூறினாலும், அதற்கு மாறாக பிரதமரின் கருத்து இருந்தது. 543 எம்.பி. தொகுதிகளுக்குள்ளேயே 33 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கக்கூடாது.

தொகுதி மறுவரையறைக்கு 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாக வைத்து, ஓபிசி சமுதாயத்தினரின் உரிமையை பறித்து கொள்ள முயற்சி செய்கிறார். அவர்களுக்கு அநீதி இழைக்க முயற்சி நடக்கிறது. காங்கிரஸ் இதனை அனுமதிக்காது. அரசியலமைப்பு அனைவருக்குமானது. இந்த நாடு ஒவ்வொரு குடிமக்களுக்கும் சொந்தமானது.” என்பதாக பேசினார்.

—   அங்குசம் செய்திப்பிரிவு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.