கைதியை தப்பவிட்ட காவலர்கள் ! எஸ்.பி. கொடுத்த அதிரடி!

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

விருதுநகர் மாவட்டம் பந்தல்குடி காவல் நிலையத்தில் பணியாற்றிய மூன்று காவலர்கள், கைதியை தப்பவிட்ட குற்றச்சாட்டில் தற்காலிகமாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த நவம்பர் 2-ஆம் தேதி, தென்காசி மாவட்டம் கடையத்தைச் சேர்ந்த மாடசாமி மகன் பாலமுருகன் என்பவர், 2019-ஆம் ஆண்டு பதிவான ஒரு வழக்கில் அருப்புக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

கைதியை தப்பவிட்ட காவலர்கள் அவரை கேரளா வையூர் மத்தியச் சிறையிலிருந்து கொண்டு வந்தது சிறப்பு சார்பு ஆய்வாளர் நாகராஜன், காவலர் தரவிஜோதி, மற்றும் காவலர் சுதாகர் ஆகியோர் ஆவர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின், கைதியை மீண்டும் கேரளா சிறைக்கு அழைத்துச் செல்லும் போது, பாலமுருகன் “கழிவறை செல்ல வேண்டும்” என கூறி தப்பிச் சென்றார்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

கண்ணன்
கண்ணன்

இதனைத் தொடர்ந்து, கேரளா மாநிலம் வையூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணையில் காவலர்களின் அலட்சியம் மற்றும் கவனக்குறைவு உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் உத்தரவின் பேரில், மூவரும் தற்காலிகமாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 

—   மாரீஸ்வரன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.