நூற்றுக்கணக்கான போர்ஜரி வழக்கு… ? தனியார் பள்ளி தாளாளர் கைது !
நூற்றுக்கணக்கான போர்ஜரி வழக்கு… ? தலைமறைவாக இருந்த “கிரீன் பார்க் பள்ளி தாளாளர் கைது…!
பள்ளி மற்றும் கல்குவாரிகளில் பங்குதாரர்களாக சேர்த்துக்கொள்வதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்ததில் 123 போர்ஜரி வழக்குகள் பதிவாகி தலைமறைவாக இருந்த தனியார் பள்ளி தாளாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் தர்மபுரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம், பொம்மிடி அடுத்த மணலூர் கிராமத்தை சேர்ந்தவர் முனிரத்தினம். கடத்தூரில் உள்ள கிரின் பார்க் பள்ளியின் தாளாளரான இவர் கடந்த 2016 -ஆம் ஆண்டு பொம்மிடி பகுதியில். எவரெஸ்ட் என்னும் பெயரில் பள்ளியை தொடங்கி பங்குதாரர்களுக்கு பணம் கொடுக்காமல் ஏமாற்றியவர் பள்ளியை விற்றுவிட்டு கடத்தூர் அருகில் எவரெஸ்ட் அறக்கட்டளை மூலம் கிரீன் பார்க் என்னும் பெயரில் பள்ளியை தொடங்கி பங்குதாரர்களாக சேர்த்துக்கொள்வதாக விளம்பரங்கள் செய்தார் அதில் 100 பேரிடம் சிறு சிறு பங்குத் தொகையாக சுமார் 12 கோடியே 23 லட்சம் ரூபாயை நிர்வாகம் பெயரில் வசூலித்தார்.
இந்நிலையில், பங்குத்தாரர்களுக்கு கடந்த 7 வருடங்களாக முதலீட்டிற்கான லாபம் மற்றும் ஈவுத்தொகையை வழங்காமல் பள்ளி நிர்வாகம் இழுத்தடித்ததாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் தர்மபுரி குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து இடைத்தரகர்களாக செயல்பட்ட திருப்பத்தூர் மாவட்டம் அலங்காயம் வட்டார கல்வி அலுவலர் சித்ரா, அவரது கணவர் செல்வம், ஓய்வு பெற்ற ஆசிரியர் சம்பத் ஆகியோர் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டனர்.
“தனியார் பள்ளி மோசடி புகாரில் வட்டார கல்வி அலுவலர் ஆசிரியர்கள் கைது! தாளாளர் தலைமறைவு ! ” என்ற தலைப்பில் அங்குசம்”இணையதளத்தில் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திருந்தது.
அதனைத்தொடர்ந்து, இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு பள்ளி தாளாளர் முனிரத்னம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் 2 கோடி ரூபாய் வைப்பாக நீதிமன்றத்தில் செலுத்தி முன் ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டது.
“இரண்டு கோடி ரூபாய்” செலுத்த வேண்டும் என்ற உத்தரவை மாற்றியமைத்து முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று முனி ரத்தினம் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
2 கோடி ரூபாய் டெபாசிட் செய்யவில்லை. டெபாசிட் பணம் கட்டவில்லை பல குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளது எனவே, குற்றம் சாட்டப்பட்டவருக்கு முன் ஜாமீன் வழங்க கூடாது என எதிர்தரப்பு வழக்கறிஞர் வாதத்தை தொடர்ந்து இனி ஜாமீன் வழங்க முடியாது என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தார் நீதிபதி தமிழ்செல்வி அதனைத் தொடர்ந்து தலைமறைவானார் முனிரத்தினம் போலீஸ் போர்வையில் வந்த குண்டர்கள் கடத்தூர் பல்லவன் கிராம வங்கி அருகே முனி ரத்தினம் மனைவி குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் பிப்ரவரி 16 ந்ததேதி மாலை 4 மணி அளவில் அவரின் வீட்டு முன்பாக சுமார்-40 க்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத நபர்கள் போலீஸ் என கூறிக்கொண்டு அவரின் வீட்டின் கதவை தட்டி உங்கள் கணவர் மீது சேலம் போலீசில் புகார் கொடுத்துள்ளார்கள், அவரை விசாரணைக்கு அழைத்துச் செல்வதற்காக வந்து உள்ளோம் என கூறி இருக்கிறார்கள்.

தகவல் அறிந்து வந்த கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர் சம்பவ இடத்திற்கு சென்று வந்திருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் பள்ளி தாளாளர் மீது வழக்கு பதிவு செய்ததற்க்கு மற்றும் விசாரணைக்கான எந்த ஆவணமும் இல்லை என கடத்தூர் போலீசுக்கு தகவல் அளித்ததின் பேரில் வந்திருந்தவர்கள் ஓட்டமெடுத்தனர் நூற்றுக்கணக்கான போர்ஜரி வழக்குகள்.
முனிரத்தினத்திற்க்கும் , சென்னையை ராமச்சந்திரன், கஜேந்திரன் வசந்தகுமார், ஆகியோருக்கு இடையே நீதிமன்றத்தில் 123 வழக்குகள் பதிவாகி அதில் 110 -வழக்கில் முனிரத்தினத்திற்க்கு சாதகமாக வந்ததாகவும் மீதமுள்ள வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன.
அதனைத்தொடர்ந்து , சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரிடம் கூட்டு ஒப்பந்த அடிப்படையில் கல்குவாரியைக் குத்தகைக்கு எடுக்கலாம் எனக்கூறி, கடந்த 2019-ஆம் ஆண்டில் 38 கோடி ரூபாய் வாங்கியதாகக் கூறப்படுகிறது. ஆனால், முனிரத்தினம் கல் குவாரியை குத்தகைக்கு எடுக்காததுடன், பணத்தையும் திருப்பித் தராமல் 7 ஆண்டுகளாக ஏமாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், கூட்டுத் தொழில் தொடர்பான பணப்பரிவர்த்தனைகள் அனைத்தும் சேலத்தில் நடைபெற்றதால், ராமலிங்கம் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில்,, பங்குத்தாரர்களுக்கு 7 வருடங்களாக முதலீட்டிற்கான லாபம் மற்றும் ஈவுத்தொகையை வழங்காமல் முனி ரத்தினம் ஏமாற்றி வந்ததில் கடந்த ஆண்டு போலீசில் புகார் அளிக்கப்பட்டது .
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
ஏற்கனவே பள்ளி பங்குதாரர்கள் அளித்த பண மோசடி விவகாரத்தில் தலைமறைவாக இருந்த முனி ரத்தினத்தை பிடிக்க சென்னையில் கைது.
தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்திய போலீசார், கடந்த 4 ந்ததேதி சென்னையில் பதுங்கியிருப்பதாக போலீசுக்கு தகவல் வர அங்கு சென்ற சேலம் போலீசார்கள் முனிரத்தினத்தை கைது செய்து, விசாரணைக்குப் பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
— மணிகண்டன்.