ரக்ஷிதாவை ரவுண்ட் கட்டும் தயாரிப்பாளர்கள்!.
விஜய் டிவி சீரியலான ‘சரவணன்–மீனாட்சி’ மூலம் புகழ் பெற்றவர் ரக்ஷிதா மகாலட்சுமி. அதன் பின்னர் பல்வேறு சீரியலில் நடித்தார். கமல் தொகுத்து வழங்கிய ‘பிக்பாஸ்’ வீட்டுக்கு போய் வந்த பிறகு மேலும் ஃபேமஸாகி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் சினிமா ஏரியாக்களில் கவர்ச்சி ரோலில் கதி கலக்கினார் ரக்ஷிதா.
அந்த மூன்று மொழி சினிமாக்களின் தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள் மகாலட்சுமி கடாட்சம் கிடைக்க ரவுண்ட் கட்டினார்கள். இதைப் பயன்படுத்தி செமத்தியாக ‘கல்லா’ கட்டினார் ரக்ஷிதா.
சில ‘சீக்ரெட்’ கால்ஷீட்டுகளுக்காக மாலத்தீவு, துபாய், லண்டன், போன்ற நாடுகளுக்கு அடிக்கடி போக்குவரத்துப் பணிகளை பக்காவாக ப்ளான் பண்ணுவதால் அந்தக் கடவுள் மகாலட்சுமியே மலைக்கும் அளவுக்கு இந்த மகாலட்சுமியிடம் பணம் கொட்டோ, கொட்டெனகொட்டுகிறதாம்.
இந்த லைனில் ரக்ஷிதாவின் ‘கிளாமர் சேவை’யைப் பார்த்த தயாரிப்பாளர் ஜே.சதீஷ்குமார்( ஜே.எஸ்.கே.) டைரக்டர் அவதாரம் எடுத்து ரக்ஷிதா, சாக்ஷி அகர்வால், சாந்தினி உட்பட நான்கு ஹீரோயின்கள் புண்ணியத்தில்’ஃபயர்’ என்ற கிளுகிளு குளு குளு படத்தையும் எடுத்து முடித்து விட்டார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படத்தின் ஹீரோ பாலாஜி முருகதாஸுடன் ரக்ஷிதா ரவுண்ட் கட்டி அடிக்கும் ‘பெட்ரூம்’ சீனைக் காட்டியே டிஸ்ட்ரிபியூட்டர்களிடம் படத்தை விற்று பட்ஜெட்டை விட டபுள்ஸ் கலெக்ஷன் பண்ணிட்டாராம் ஜே.எஸ்.கே.
” நான் ‘அது’க்கு மட்டும் தான்னு நினைச்சுப்புடாதீகப்பு… போலீஸ் கெட்டப்பிலும் ‘எக்ஸ்ட்ரீம்’ படத்தில் பொளந்து கட்டிருக்கேன்” என்கிறார் ரக்ஷிதா மகாலட்சுமி. இந்த கெட்டப்பும் மகாலட்சுமிக்கு ‘நச்’ சுன்னு தான் இருக்கு. எல்லாத்தையும் சொல்றது தானே நம்ம ‘பாலிஸி’.
— மதுரை மாறன்.