மீண்டும் ரவுண்ட் வருகிறார் நிதி அகர்வால்!.
சொந்த ஊர் ஆந்திர தேசம் என்றாலும் இந்தியில் ‘முன்னா மைக்கேல் ‘ படம் மூலம் 2017-ல் அறிமுகமானார் நிதி அகர்வால். அங்கிருந்து தெலுங்கு சினிமாவாக்கு வந்தார். அங்கிருந்து தமிழ் சினிமாவுக்கு வந்து சிம்புவுடன் ‘ஈஸ்வரன்’, ஜெயம் ரவியுடன் ‘பூமி’, உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக ‘கலகத்தலைவன்’ என மூன்று படங்களில் நடித்தார்.
அதன் பிறகும் இங்கே சரியான சான்ஸ் ‘க்ளிக்’ ஆகாததால் தெலுங்கு சினிமாவில் மையம் கொண்டார். சம்பளம் அங்கே அதிகம் என்பதால் மையலும் கொண்டார்.
இப்போது ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் ஜோடியாக நிதி நடித்துள்ள ‘ ஹரிகர வீரமல்லு’ தெலுங்குப் படம் 2025 மார்ச்சில் ரிலீஸ் ஆகிறது. ‘ ராஜா சாப் ‘ என்ற தெலுங்குப் படமும் நிதியின் கையில் உள்ளது. இந்தப் படங்களில் நடித்து முடித்துவிட்டு 2025- ல் தமிழிலும் ஒரு ரவுண்ட் வர முடிவெடுத்துள்ளாராம் நிதி அகர்வால்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இதனால் ‘ஸ்பெஷல் ஃபோட்டோ ஷூட் ‘ நடத்தி வாரம் தோறும் ஆரவாரமாக, அமர்க்களமாக ரிலீஸ் பண்ண ரெடியாகி விட்டார் 33 வயதாகும் நிதி அகர்வால்.
— மதுரை மாறன்.