அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்! தனியாக கெத்து காட்டும் விடியல் ராஜு!*

திருச்சியில் அடகு நகையை விற்க

2026 – 2029 ஆம் ஆண்டுக்கான தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளுக்கான தேர்தல் நாளை (பிப்ரவரி 22)  நடைபெறவுள்ளது.

இத்தேர்தலில் இப்போது துணைத்தலைவராக இருக்கும் ஜி.எம்.தமிழ்க்குமரன் தலைமையில் ஒரு அணியும், தலைவராக இருக்கும் முரளி ராமசாமி தலைமையில் ஒரு அணியும் போட்டியிடுகிறது. டோர் பை டோர் கேன்வாஸிங்கும் சூடுபிடித்தது. எந்த அணியிலும் சேராமல் சுயேட்சையாக தலைவர் பதவிக்கு  மன்னனும், பொருளாளர் பதவிக்கு விடியல் ராஜு, செயலாளர் பதவிக்கு கதிரேசன் துணைத் தலைவர் பதவிக்கு சதீஷ்குமார், நடிகர் உதயா, இணைச் செயலாளர் பதவிக்கு விஜயசேகரன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

இரண்டு அணிகளும் கரன்சி, அன்பளிப்புகள் என வாரி வழங்கி வாக்கு கேட்டு வரும் தேர்தல் களத்தில் சுயேட்சையாக போட்டியிடும் விடியல் ராஜு எந்தவித அன்பளிப்புகளும் கொடுக்காமல் தனது கடந்த கால செயல்பாடு, களப்பணி, வாக்கு சேகரிப்பில் தனது அணுகுமுறையால் அணிகளின் சார்பில் பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் சுபாஷ் சந்திர போஸ், விஜயகுமார் இரண்டு வேட்பாளர்களுக்கும் கடுமையான போட்டியாளராக மாறியிருக்கிறார் விடியல் ராஜு.

விடியல் ராஜு
விடியல் ராஜு

Admission Enquiry Form

சென்னையைச் சேர்ந்த விடியல் ராஜு ‘ஆளு’ என்கிற படத்தின் மூலம் தயாரிப்பாளராக, நடிகராக சினிமாவில் எண்ட்ரி ஆனவர். இந்தப் படத்திற்கு தமிழ்நாடு அரசின் சிறந்த திரைப்பட விருதும், அந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த வில்லன் நடிகர் விருதையும் பெற்றுள்ளார்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

திரைத்துறை சார்ந்தவர்களுக்கான வீட்டுவசதி வாரியத்தின் தலைவராக பணியாற்றி இன்றுவரை வாரியம் முடங்கி விடாமல் இருக்க காரணமானவர் விடியல் ராஜு என்பதுடன், தயாரிப்பாளர்களுக்கு நெருக்கடி, பிரச்சினை என தகவல் கிடைத்தாலே   ஆஜராகி விடுவார் விடியல் ராஜு என்கின்றனர் பல தயாரிப்பாளர்கள்.

தேர்தல் களத்தில் தனது  செயல்பாடு, வாக்கு கேட்கும் பாணி காரணமாக பிரதான போட்டியாளராக மாறி கெத்து காட்டுகிறார்.

ரஜினியின் வாக்கு கேட்கும் தமிழ்க் குமரன்
ரஜினியின் வாக்கு கேட்கும் தமிழ்க் குமரன்

தமிழ் சினிமா தயாரிப்பாளர்களில் பெரும்பான்மையினராக இருப்பவர்கள் செட்டியார்கள். அதனாலேயே இராமநாராயணன், அவரை தொடர்ந்து முரளி ராமசாமிக்கு அசைக்க முடியாத வாக்கு வங்கி இருந்து வருகிறது. அதே போன்று கமீலா நாசருக்கு அவரது சிறுபான்மை சமூகத்தவர் வாக்குகள் மட்டுமே கிடைக்கும் என்கிற சூழலும் இருப்பதால்தே போன்று கணிசமான அளவில் இருக்கும் நாயுடு சமூகத்தினர் விடியல் ராஜுக்கு வாக்களிக்க தயாராகிவிட்டார்களாம்.

முரளி ராமசாமி, தமிழ்குமரன் அணியை விரும்பாதவர்கள் விரும்பக்கூடிய வேட்பாளராக விடியல் ராஜு இருப்பதால் அவரது வாக்கு சதவீதம் அதிகரித்து பொருளாளர் பதவிக்கான வேட்பாளர்களில் முதல் இடத்தை நோக்கி முன்னேறும் வெற்றி வேட்பாளராக விடியல் ராஜு இருக்கின்றார் என்கின்றனர் தேர்தல்கள நிலவரத்தை கவனித்து வரும் மூத்த தயாரிப்பாளர்கள். பார்ப்போம் என்ன நடக்குதுன்னு.

—   ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.