அரசுப்பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி வாய்ப்புகள் குறித்த நிகழ்ச்சி !
தென்புலம் அறக்கட்டளை ஏற்பாட்டில் உயர்கல்வி வாய்ப்புகள் குறித்து அரசுப்பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுரையின் படி ஏற்பாடு செய்யப்பட்டது . கல்லூரி முதல்வர் முனைவர். வெண்ணிலா வரவேற்றுதமிழ், ஆங்கிலம், வணிகவியல், மற்றும் கணிததுறை சார்ந்த வாய்ப்புகள், அரசுத்திட்டங்கள் மற்றும் கல்வி உதவித் தொகை குறித்து துறைத் தலைவர்கள் விளக்கினார்கள்.
அதை தொடர்ந்து துறை ரீதியான விளக்கப் புகைப்படங்கள் மற்றும் கருத்துரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியில் டிகல்லுப்பட்டி, வாகைக்குளம், அம்மாபட்டி, எம்.சுப்புலாபுரம் பள்ளி மாணவர்கள், பேராசிரியர்கள் ,மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான உணவு ஏற்பாடுகளை தென்புலம் அறக்கட்டளை சிறப்பாக செய்திருந்தனர்.
– ஷாகுல்