பறிமுதல் வாகனங்கள் பொது ஏலம் !
திருச்சி மாநகர போதை பொருள் ஒழிப்புக்குழுவின் தலைவர்/ மாநகர காவல் ஆணையர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மாநகர காவல்துறையினரால் போதை பொருள் கடத்தல் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு சக்கர வாகனங்கள் 25, நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 29 வாகனங்கள் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.
மேற்படி வாகனங்களின் பொது ஏலம் வருகின்ற 11.12.2025 ஆம் தேதி காலை 10.00 மணியளவில் திருச்சி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது. வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புவோர் வருகின்ற 09.12.25-ம் தேதி காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை, மாநகர ஆயுதப்படை வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ள மேற்கண்ட வாகனங்களை பார்வையிட்டுக் கொள்ளலாம். மேலும் வாகனங்களை ஏலம் எடுக்க விருப்பமுள்ளவர்கள் ஏலம் நடைபெறும் நாளான 11.12.2025 காலை 08.00 மணிமுதல் 10.00 மணிவரை தங்களது ஆதார் அட்டையுடன் இருசக்கர வாகனங்களுக்கு ரூ.2,000/-ஐ முன் பணமும், நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.5,000/-ஐ முன்பணமும் செலுத்தி தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
ஏலம் எடுத்த உடன் ஏலத்தொகையுடன் சரக்கு மற்றும் சேவை வரியான GST தொகையையும் செலுத்தி ஏலம் எடுத்த வாகனத்தை பெற்றுக்கொள்ளலாம் என திருச்சி மாநகர காவல் திருமதி.ந.காமினி, ஆணையர் தெரிவித்துள்ளார்கள். இ.கா.ப. அவர்கள்
Comments are closed, but trackbacks and pingbacks are open.