துறையூர் நகராட்சியை முற்றுகையிட்ட பொதுமக்கள்..
திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகள் உள்ளன. துறையூர் பேருந்து நிலையம் அருகே சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் சின்ன ஏரி அமைந்துள்ளது. சின்ன ஏரி நீரை மறுசுழற்சி செய்யும் இடத்தை மாற்ற வேண்டி கோரிக்கை…
இந்த ஏரியில் நகரின் முக்கிய கழிவுகள் உணவகங்களின் கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு வடிகால் அசுத்த நீர்கள் சென்று சேர்கின்றன. இந்த சின்ன ஏரியை தூர்வாரி நீரை மறுசுழற்சி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..
இந்த கோரிக்கையை ஏற்று அதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ஏறி தண்ணீரை மறுசுழற்சி மூலம் சுத்திகரிப்பு செய்யும் இடம் விநாயகர் தெருவில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தில் அமைக்க உள்ளதால் அப்பகுதி மக்கள் சுத்திகரிப்பு நிலையம் எங்கள் பகுதியில் அமைத்தால் துர்நாற்றம் வீசும் எனவும் இதனால் சுற்றுச்சூழல் மாசுபடும் எனவும் கூறி சுமார் 100க்கும் மேற்பட்டோர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு சுத்திகரிப்பு நிலையத்தை வேறு இடத்தில் மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
கிராம பொது மக்கள் பேச்சு வார்த்தை நடத்தி சுத்திகரிப்பு நிலையம் வேறு இடத்தில் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என நகர்மன்ற தலைவர் செல்வராணி தெரிவித்ததை அடுத்து கூட்டம் கலைந்து சென்றது.
இதனால் சுமார் ஒரு மணி நேரம் நகராட்சி அலுவலக வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது.







