அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

“அதிகாரமும் அதிகாரியும்” –  Dr. கு. அரவிந்தன்

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

பொதுவாக அரசு இயந்திரம் என்பது அதிகாரிகள் மூலமாகவே இயங்குகிறது.. அனைத்து துறைகளிலும் அதிகாரிகள் இருப்பார்கள் அவரவர்களுக்கு ஏற்றார்ப் போல் அவர்களுக்கு அதிகாரம் தரப்பட்டுள்ளது… அதிகாரிகளோ நல்ல முறையில் அவ்வதிகாரத்தை பயன்படுத்தியே மக்களுக்கு நலத்திட்டங்களை சென்று சேர்க்க முடியும்.. சற்று புரியும்படி சொல்கிறேன் அதிகாரத்தை பயன்படுத்துவது என்பது கயிறு மேல் நடக்கும் வித்தை போல.. Balanced ஆக இருக்க வேண்டும்… அதாவது அதிகாரத்திற்கு கீழேவும் நடக்க முடியாது, அதிகாரத்தை மீறி மேலேவும் செல்ல முடியாது..

அது சரி இப்போது ஏன் இதையெல்லாம் சொல்லுகிறேன் என்று கேட்டால்.. நேற்றைய தினம் நமது முதல்வர் தஞ்சைக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்குவதற்காக வருகை புரிந்திருந்தார்.. தஞ்சை மாநகர் எங்கும் நல்லதொரு ஏற்பாடு.. விழாக்கள் சீரும் சிறப்புமாய் நடைபெறுவது முதல்.. சரியான பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் சேர்வதை உறுதி படுத்துவது வரை.. மிக அருமையாக நமது மாவட்ட ஆட்சியர் திருமதி பிரியங்கா பங்கஜம் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.  நமது முதல்வர் அவர்களே விழா மேடையில்.. நமது மாவட்ட ஆட்சியர் பிரியங்கா மேடம் அவர்களை  தமிழகத்தில் சிறப்பாய் பணியாற்றும் மாவட்ட ஆட்சியர்களில் இவரும் ஒருவர் என்று புகழ்ந்தார்..  முதல்வர் அவர்கள் வெறும் புகழ்ச்சிக்காக இதை கூறுவதாக அனைவரும் என்ன வேண்டாம்..

இந்த வார August 12 அங்குசம் இதழில்…

பிரியங்கா பங்கஜம்
பிரியங்கா பங்கஜம்

பொதுவாக மாவட்ட ஆட்சியர்கள் எல்லாம் இப்பொழுது.. அதிகாரத்தை வைத்திருக்கும் அதிகாரிகளை எவ்வாறு பணியாற்றுகிறார்கள் என்று பல தொலைக்காட்சிகள் வாயிலாகவும் சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் வீடியோக்களை நாம் பார்க்கிறோம்.. ஏனோ மாவட்ட ஆட்சியர்கள் செல்லும் இடமெல்லாம் வீடியோவும் பின் தொடர்ந்து செல்கிறது. அதை போஸ்ட் செய்கிறார்கள்.  ஆனால் சத்தமே இல்லாமல் நமது ஆட்சியர் எவ்வாறு பணிபுரிவார்கள் என்று நான் கிட்ட நின்று பார்த்திருக்கிறேன் . அவர்கள் எந்த சூழ்நிலையிலும் அளவுக்கு மீறி கோபப்பட்டோ, பொறுமை இழந்து பேசியோ நான் பார்த்ததில்லை.. வரும் அனைவரையும் சார், தம்பி, ஐயா, அம்மா, வாங்க, போங்க என்று தான் புன்னகையுடன் பேசும் பழக்கம் உடையவர்..  எந்த நேரத்தில் யார் சென்றாலும் பார்த்துவிட்டு தான் செல்வார்கள்  நான் அதை செய்தேன் இங்கே சென்றேன் என்றெல்லாம் விடியோக்கள் வராது.. ஆனால் அவர்களின் செயல்கள் பேசும்  ஆம் சத்தமே இல்லாமல் பல காரியங்களை அவர் செய்து கொண்டிருக்கிறார்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

நான் ஒரு மருத்துவராக இருப்பதால் எனது துறையின் கீழ் அவர்கள் செய்த காரியங்களை சிறிது கூறிவிட்டு செல்கிறேன்.. அவர்கள் தஞ்சையில் பணி ஏற்கும் பொழுது.. நமது தஞ்சை மாவட்டத்தில் சிசுக்களின் இறப்பு விகிதமும் ஒரு வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளின் இறப்பு வீதமும் அதிகமாக இருந்தது.. அவர்களுக்கு முன் இருந்த ஆட்சியர்கள் எல்லாம் என்ன குறை என்று கேட்பார்களே தவிர அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று முன்னெடுத்து எதையும் செய்ததை நான் பார்த்ததில்லை.. ஆனால் மேடம் அவர்கள் மற்ற அதிகாரிகள் போல் இல்லாமல், ஏன் இதெல்லாம் அதிகமாக இருக்கு என்று கடிந்து கொள்ளாமல்.. பொறுமையாக நேரமெடுத்து அனைத்து குறை நிறைகளையும் கேட்டு.. கேட்டதோடு மட்டுமல்லாமல்.. ஏறத்தாழ இந்த பத்து மாதங்களில் 50 தடவையாது எங்கள் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு வந்து சென்று இருப்பார்கள்..

எனக்கு நினைவு தெரிந்து எந்த ஒரு மாவட்ட ஆட்சியரும் இத்தனை முறை எங்கள் மருத்துவமனைக்கு வந்ததே இல்லை.. மேடம் வரும்போது எல்லாம் வீடியோக்கள் கேமராக்கள் பின் தொடர்ந்து வராது ஆனால் அவர்களின் எண்ணங்கள் இங்கேதான் இருக்கும் சுற்றிக்கொண்டே தான் இருக்கும்.. பல அதிகாரிகள் செய்ய தயங்கிய பல விடயங்களை தன் அதிகாரங்களால் சர்வ சாதாரணமாக  நடத்திக் காட்டினார் ..

பல ஆண்டுகளாக தேங்கி கிடந்த பல டன் குப்பைகளை அகற்றினார்.. செவிடன் காதில் ஊதிய சங்காய் பலரிடம் நாங்கள் செவிலியர்கள் வேண்டும் வேண்டும் என்று கேட்டதை உடனடியாக நிறைவேற்றினார்.. சி எஸ் ஆர் நிதி மூலம் அவர்களின் சொந்த முயற்சியால் பல கோடி மதிப்பிலான உபகரணங்களை எங்களுக்கு வாங்கித் தந்தார்.. Contract பணியாளர் முதல் ventilator, battery கார் வரை அவர்கள் எங்கள் மருத்துவமனைக்கு செய்த சாதனைகளை கூற பதிவு பத்தாது.

10 மாதங்களில் அவர்கள் செய்த இத்தனை முயற்சிகளால் இன்று தஞ்சை மாவட்டம் சிங்கிள் டிஜிட் IMR இல் இருக்கிறது.. RMH குழந்தைகள் நலப் பிரிவு மிகவும் செவ்வனே பயனாளிகளுக்கு மருத்துவம் பார்த்துக் கொண்டிருக்கிறது… இதைவிட பெரிய விஷயம் என்னவென்றால் தன்னால்தான் இறப்பு விகிதம் குறைந்தது என்று மார்தட்டி கொண்டு பேட்டி கொடுக்காமல்.. மருத்துவர்கள் செவிலியர்களே உங்களால் தான் இறப்பு விகிதம் குறைந்தது என்று நேரில் வந்து நூற்று கணக்கான மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும்  நின்று தன் கையால் கையெழுத்திட்டு பாராட்டு சான்றிதழை கொடுத்து விட்டு சென்றார்  மூச்சுக்கு 300 தடவை என் குழந்தைக்கு என்னவெல்லாம் கிடைக்கிறதோ இந்த குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருப்பார்.. இப்போது சொல்லுங்கள் தாயுள்ளம் படைத்த நமது மாவட்ட ஆட்சியரை நமது முதல்வர் பாராட்டியது சரிதானே  நல்லதொரு அதிகாரி நமது மாவட்டத்திற்கு கிடைத்தது நமது பாக்கியம்

 

..   Dr. கு. அரவிந்தன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.