8 கிலோ கஞ்சா விற்பனை ! குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது !

0

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

திருச்சிராப்பள்ளி மாவட்டம், இராம்ஜிநகர் கா.நி குற்ற எண். 123/25, ச.பி. 8 (c) r/w 20(b)(ii) (B) NDPS Act 1) பவித்ரன் வயது 28, த.பெ. சந்திரசேகர், நியூ காட்டூர். புங்கனூர், 2) சுந்தர்ராஜன் வயது 30. த.பெ.மோகன், மில் காலனி, ராம்ஜிநகர் மற்றும் இராம்ஜிநகர் கா.நி குற்ற எண். 124/25, ச.பி. 8 (c) r/w 20(b)(ii) (B) NDPS Act வழக்கில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த சரவணன் வயது 35, த.பெ. நமச்சிவாயம், நியூ காட்டூர், புங்கனூர் ஆகிய மூன்று நபர்களையும் இராம்ஜிநகர் போலீஸார் கைது செய்து அவர்களிடம் இருந்து மொத்தம் 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

மேற்படி மூன்று எதிரிகள் மீதும் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப.,  பரிந்துரையின் பேரில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு இன்று 18.06.2025-ஆம் தேதி சிறையில் உள்ள மூன்று எதிரிகளிடமும் சார்வு செய்யப்பட்டது என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

மேலும் திருச்சி மாவட்டத்தில் ஜனவரி 2025 முதல் தற்போது வரை மொத்தம் 43 தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட எதிரிகளிடம் சார்வு செய்யப்பட்டுள்ளது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.