கோடிகளில் பேரம் … கட்டப்பஞ்சாயத்து … மிரட்டல் வழக்குகள் … இன்ஸ் சுகுமாறன் கைது எழுப்பும் கேள்விகள் !

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுமாறன், சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே, தொழிலதிபர் வீரமணி பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில் இன்ஸ்பெக்டர்கள் தொடங்கி உயர் அதிகாரிகள் வரையில் அடுத்தடுத்து காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டு வரும் நிலையில்,  பல பெண்களுடன் தொடர்பில் இருந்தார் தன்னை சித்திரவதை செய்தார் என்ற குற்றச்சாட்டில் பரமக்குடி டி.எஸ்.பி. ஜாபர் சித்திக் கைதும்; இன்ஸ்பெக்டர் சுகுமாறன் கைதும் போலீஸ் துறையில் என்னதான் நடக்கிறது என்ற மையமான கேள்வியை எழுப்பியிருக்கிறது.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

தஞ்சையை சேர்ந்த A to Z மருத்துவமனையின் உரிமையாளர்களான ஆர்.எம்.பாஸ்கரன் மற்றும் அவரது தம்பி மகன் ஆர்.எம்.சரவணன் ஆகிய ஒரு தரப்புக்கும் அதே மருத்துவமனையின் மற்றொரு தரப்பான அம்மருத்துவமனையின் பங்குதாரரான டாக்டர் ராமசாமி – ஜெயஸ்ரீ தம்பதியினருக்கும் இடையிலான உரிமையியல் பிரச்சினையில் தலையிட்டு கட்டப்பஞ்சாயத்து செய்ததோடு மட்டுமின்றி, 5 கோடி ரூபாய் கைமாறிய விவகாரத்தில்தான் இன்ஸ்பெக்டர் சுகுமாறன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இன்ஸ்பெக்டர் சுகுமாறன்
இன்ஸ்பெக்டர் சுகுமாறன்

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இரு தரப்பிலும் அடுத்தடுத்து போலீசில் புகார்கள் கொடுக்கப்பட்டு; அப்புகாரில் போலீசாரின் கைது நடவடிக்கைகளை தொடர்ந்துதான், இந்த கட்டப்பஞ்சாயத்து விவகாரம் சர்ச்சையாகியிருக்கிறது. தனிப்பட்ட முறையில் இன்ஸ்பெக்டரே இப்படி ஒரு கட்டப்பஞ்சாயத்தை துணிந்து செய்து விட சாத்தியமா? உயர் அதிகாரிகளின் உத்தரவில்தான் இப்படி செய்தாரா? 5 கோடி ரூபாயை இலஞ்சமாக பெற்றாரா? மற்றொரு தரப்புக்கான செட்டில்மெண்டுக்காக பெற்றாரா? மருத்துவமனைக்கு உரிமை கொண்டாடும் இரு தரப்பினரின் பின்னணி என்ன? மருத்துவமனையின் கட்டுமானம் மற்றும் விதிமீறல்கள் குறித்து புகார் அளித்த நன்மாறன் என்பவரின் பின்னணி என்ன? அவரது புகாரில் ஆர்.எம். பாஸ்கரனுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழான வழக்கும் கைது நடவடிக்கையும் சட்டப்படியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளா? ஒரு தரப்பை மிரட்டி அச்சுறுத்தி பணிய வைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையா? இந்த விவகாரத்தில் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட மேலிடத்தின் தொடர்புகள் என்ன? என்பதெல்லாம் சிபிசிஐடி போலீசாரின் விசாரணையில் அவிழ்க்க வேண்டிய மர்ம முடிச்சுகளாக நீடிக்கின்றன.

தமிழகத்தில் கோடிகளில் நடைபெறும் பண மோசடி மற்றும் நிலமோசடிகளை பிரத்யேகமாக கையாளும் குற்றப்பிரிவு போலீசாரின் நடவடிக்கைகள் தொடர்ந்து சர்ச்சையை எதிர்கொண்டு வருகின்றன. இந்த புகார்களில் பெரும்பாலும் கோடீஸ்வரர்களும், அரசியல் செல்வாக்கை பின்னணியாக கொண்டவர்களும் தொடர்புடைய விவகாரமாக இருப்பதன் காரணமாகவே, உயர் அதிகாரிகளின் தலையீடும் கட்டப்பஞ்சாயத்தும் பணம் கைமாறுதலும் சர்வ சாதாரணமாக நடைபெறுவதாக எழும் பரவலான குற்றச்சாட்டுகள் குறித்து விவரிப்பதோடு, இந்த விவகாரத்தை அரசு சீரியசாக அணுக வேண்டியதன் அவசியம் குறித்தும் அலசுகிறது, இந்த காணொளி.

–       அங்குசம் புலனாய்வுக்குழு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.