‘ரெய்டு’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK
விக்ரம் பிரபு நடிப்பில், இயக்குநர் முத்தையா வசனத்தில் அறிமுக இயக்குநர் கார்த்திக் இயக்கத்தில் ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள ‘ரெய்டு’ திரைப்படம் தீபாவளி வெளியீடாக நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகிறது. இதன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. .
ஒளிப்பதிவாளர் கதிரவன், “இந்தப் படத்தில் நான் வேலை செய்ய முக்கிய காரணமாக இருக்கும் முத்தையா அண்ணனுக்கு நன்றி. இன்று தொழில்நுட்பம் அதிகம் வளர்ந்து விட்டது. உணர்வுகளை சரியான விதத்தில் வெளிப்படுத்துவதுதான் ஒளிப்பதிவாளருக்கு இருக்கும் பெரிய சவால் என்று நினைக்கிறேன். முடிந்தளவு அதை சரியாக இந்தப் படத்தில் கையாண்டுள்ளேன். என்னுடைய பார்வையில் எல்லா கலைஞர்களையும் வேறு விதமாக காட்ட முயற்சித்துள்ளேன். படத்தில் என்னை ஊக்குவித்து ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி”.
Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited
கலை இயக்குநர் வீரமணி கணேசன், “இயக்குநரான பின்பு கார்த்தி இதில் இரண்டு மடங்கு உழைப்பைக் கொடுத்துள்ளார். ரெய்டு ஒரு மாஸான படம். அதற்கேற்ப அனைவரும் உழைத்துள்ளனர்”.
ரெய்டு
நடிகர் ரிஷி, “முத்தையா, விக்ரம் பிரபு சாருக்கு நன்றி. சண்டைக் காட்சிகளை முடிந்தளவு சிறப்பாக செய்துள்ளேன். எல்லோருக்கும் நன்றி”.
2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க
நடிகர் செல்வா, “‘வலிமை’ படத்தில் இருந்து தொடர்ந்து நான்காவது போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். என் அப்பாவுக்காக போலீஸ் கதாபாத்திரங்கள் செய்வேன். போலீஸ் பற்றி நிறைய நெகட்டிவான விஷயங்கள் வருகிறது. அவர்கள் பற்றி நல்லது வைரல் ஆவதில்லை. அப்பாவின் நினைவாக என் சம்பளத்தில் இருந்து சில நல்ல விஷயங்கள் செய்ய இருக்கிறேன். ரெய்டு படம் வெற்றி பெற வாழ்த்துகள்”.
நடிகை அனந்திகா, ” இது எனக்கு முதல் படம். நல்ல அனுபவம் கிடைத்திருக்கிறது. படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.
இயக்குநர் கார்த்தி, “இது என்னுடைய முதல் படம். இந்த சந்தோஷத்தைக் கொடுத்த முத்து மாமாவுக்கு நன்றி. விக்ரம் பிரபு எனக்கு அண்ணன் போல. அந்த அன்பு கடைசி வரை இருக்கும். ஸ்ரீதிவ்யா சிரித்த முகமாகவே இருப்பார். என்னை நம்பி இந்தப் படத்திற்குள் வந்த அனைவருக்கும் நன்றி. படம் 10ஆம் தேதி வெளியாகிறது”.
இயக்குநரும் இந்தப் படத்தின் வசனகர்த்தாவுமான முத்தையா, “‘கொம்பன்’, ‘மருது’ போன்ற மண் சார்ந்த படங்களை முடித்துவிட்டு சிட்டி சார்ந்த ஒரு கதை எடுப்போம் என நினைத்திருந்தேன். அந்த நம்பிக்கையை என் மீது கொடுப்போம் என ‘ரெய்டு’ படத்தின் ஒரிஜினல் ரீமேக் உரிமையை வாங்கினேன். அந்த சமயத்தில் ‘டாணாக்காரன்’ நல்ல ரீச் இருந்தபோது விக்ரம் பிரபு சாரிடம் படம் காட்டி கேட்டேன். அவரும் ஒத்துக் கொண்டார். என் தங்கச்சி பையன் சின்சியராக செய்திருக்கிறான். என் பெயருக்காக இதில் பல பேர் வந்திருப்பது மகிழ்ச்சி. ‘ரெய்டு’ படம் நன்றாக வந்திருக்கிறது. தீபாவளிக்கு நல்லபடியாக வெற்றி பெற வேண்டும்”.
ரெய்டு
நடிகை ஸ்ரீதிவ்யா, “‘ரெய்டு’ படம் நான் முத்தையா சாருக்காகதான் நடித்தேன். ‘மருது’ படத்தில் எனக்கு அருமையான கதாபாத்திரம் முத்தையா கொடுத்தார். விக்ரம் பிரபுவுடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. அனைவருக்கும் வாழ்த்துகள்”.
நடிகர் விக்ரம் பிரபு, ” நெகட்டிவிட்டியை வைத்துதான் இந்தப் படம் உருவாக்கியுள்ளோம். நல்ல கதைகளைதான் தேர்ந்தெடுப்பேன். இது கொஞ்சம் கமர்ஷியல் படம். எனக்கு ஆக்ஷன் பிடிக்கும். அதை கமர்ஷியலாக சில விஷயங்கள் எனக்காக சேர்த்து முயற்சி செய்து கொண்டு வந்துள்ளோம். ஸ்ரீதிவ்யாவை பல வருடங்கள் கழித்து சந்தித்துள்ளேன். இயக்குநர் கார்த்தி, வேலு பிரபாகரன் சார் என அனைவருடனும் வேலை பார்த்தது மகிழ்ச்சி. நான் லீனியர் முறையில்தான் ரெய்டு கதை எழுதப்பட்டுள்ளது. படத்தின் விஷூவலுக்காக இசையை சாம் சூப்பராக கொடுத்துள்ளார்” என்றார்.
திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending