‘ரஜினி கேங்’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!
தமிழ்சினிமாவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஃபைனான்சியராக இருப்பவர் ஜெயின்ராஜ் ஜெயின். மிஸ்ரி எண்டெர்பிரைசஸ் பேனரில் பல வருடங்களுக்கு முன்பு அர்ஜுனின் ‘ஜெய்ஹிந்த்’ ,முதல் பாகத்தையும் சமீபத்தில் ரிலீசான ‘அஷ்டகர்மா’ படத்தையும் தயாரித்தார். இப்போது ‘உப்பு-புளி-காரம்’, ‘கனா காணும் காலங்கள்’ வெப்சீரிஸின் டைரக்டர் எம்.ரமேஷ் பாரதி டைரக்ஷனில் ‘ரஜினி கேங்’ என்ற சினிமாவைத் தயாரித்து, அதன் ஃப்ர்ஸ்ட்லுக்கை அக்.06ஆம் தேதி ஜெயின்ராஜ் ஜெயின்.
படத்தின் ஹீரோ ரஜினி கிஷன், ஹீரோயின் திவிகா ஆகியோருடன் மொட்டை ராஜேந்திரன், ராம்தாஸ், கூல் சுரேஷ், கல்கி ராஜா நடித்துள்ளனர். ‘ப்ளூ’ என்ற நாய் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளதாம். ஒளிப்பதிவு : என்.எஸ்.சதீஷ்குமார், இசை : எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட், எடிட்டிங் : ஆர்.கே.வினோத் கண்ணா, பி.ஆர்.ஓ: சதீஷ் [ எய்ம் ]
ஊரைவிட்டு ஓடிப்போகும் காதல் ஜோடியின் அமானுஷ்ய அனுபவங்களும் அதைத் தொடர்ந்து காமெடி த்ரில்லரும் தான் இந்த ‘ரஜினி கேங்’. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளான படப்பை, மறைமலை நகர் ஆகிய பகுதிகளில் ஷூட்டிங் நடத்தி முடிக்கப்பட்டு, இப்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடக்கின்றன. டிசம்பரில் ரிலீசாகலாம் ‘ரஜினி கேங்’.
— ஜெடிஆர்
Comments are closed, but trackbacks and pingbacks are open.