அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

“ஏற்கனவே நான் வில்லன்”, மா.செ-களை மிரள விட்ட ரஜினி ; எக்ஸ்க்ளுசிவ் ரிப்போர்ட் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க

“ஏற்கனவே நான் வில்லன்” ; மா.செ-களை மிரள விட்ட ரஜினி !

 

கடந்த 30ம் தேதி சென்னை, ராகவேந்திரா மண்டபத்தில் மாவட்டச் செயலாளர்களை சந்தித்தார் ரஜினி. இந்த முறை அரசியல் கட்சி குறித்து இறுதியான தகவல் சொல்வார் என ஆவலுடன் சென்றனர் மா.செ.க்கள்…
கூட்டம் முடிந்த பின், “மாவட்டச் செயலாளர்களிடம் பேசினேன். முடிவு விரைவில் அறிவிப்பேன்” என வழக்கம் போல்(!).. கூறி சென்றுவிட்டார்.
அவரது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

ஆனால் ரஜினியை ஆழ்ந்து கவனிக்கும் அவரது ரசிகர்களுக்கு அன்றைய நடவடிக்கை நம்பிக்கை தருவதாக உள்ளது எனக் கூறுகிறார்கள். சென்ற முறை கோபமாக பேசி, கூட்டம் முடிந்து வேகமாக புறப்பட்டவர், இந்த முறை நிதானமாக. தீர்க்கமாக பேசியதுடன், மாடியில் நின்று கையாட்டிவிட்டு சிரித்த முகத்துடனேயே சென்றார். இது நல்ல சமிக்ஞை என்கிறார்கள் அவரது ரசிகர்கள்….

சரி… உள்ளே என்ன நடந்தது… பேசினார் என விசாரித்தோம்.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

மீட்டிங் தொடக்கத்தில் ரஜினி பேசும் போது, “மக்களுக்கு நல்லது செய்வதற்காகத் தான் நான் அரசியல் கட்சியைத் தொடங்க விரும்பினேன். முதல்வராக பதவியில் அமர வேண்டும் என்றெல்லாம் நினைக்கவில்லை. இன்றைய அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு தான் கட்சி ஆரம்பிக்கிறேன். சில மாவட்டச் செயலாளர்கள் தவறான பாதையில் நடந்து கொண்டிருக்கிறீர்கள். காசு வாங்குகிறீர்கள் என கேள்விப்படுகிறேன். நான் யாரையும் உங்களை செலவு செய்யச் சொல்லவில்லை. நான் அரசியல் கட்சி ஆரம்பித்தால் அதற்குரிய செலவை நானே ஏற்றுக் கொள்கிறேன் என்று தான் சொல்லி வருகிறேன்.
நீங்களாக செலவு செய்துவிட்டு, நான் அதற்கு செலவு செய்தேன்… இதற்கு செலவு செய்தேன்… என்று என்னிடம் வந்து நிற்கக்கூடாது.


நீங்கள் தேவையில்லாமல் மற்ற கட்சியினருடன் பேசி, அவர்களை போலவே நடந்து கொள்வது அசிங்கமாக இருக்கிறது.
காசு சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்தால் கட்சியில் இருக்க வேண்டாம். காசு சம்பாதிக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் அது போன்ற கட்சிக்கு தாராளமாக செல்லலாம். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்டச் செயலாளர்ளின் செயல்பாடுகள் பற்றி ரிப்போர்ட் என்னிடம் இருக்கிறது.
மாவட்ட செயலாளர்கள் யார், யாரிடம் காசு வாங்கியிருக்கிறீர்கள் என பெயர் முதற்கொண்டு என்கிட்ட ஆதாரம் இருக்கிறது. அவர்களை விரைவில் மாற்றுவேன். என்று பேசியவர்,
தவறு செய்த மாவட்ட செயலாளர்களிடம் விவாதித்தார். அவர்களிடம் குறுக்கு விசாரணை செய்தார். “உங்களுக்கும் அவருக்கும் என்ன தொடர்பு”..? என கேள்வி எழுப்பினார். சிலரின் பெயரைச் சொல்லி, “அவரிடம் நீங்கள் எதற்கு காசு வாங்கி இருக்கிறீர்கள்.. குடும்ப செலவுக்கா..” என கிண்டலடித்தார்.
வியர்க்கவிறுக்க நின்ற அந்த மா.செ.வைப் பார்த்து,
“ஒரிஜினலா நான் வில்லன் பா” என தர்பார் டயலாக் சொன்னார் சிரித்துக்கொண்டே.!

நிறைவாக பேசும் போது,
“தமிழ்நாட்டில் புதுமையான ஒரு அரசியலை கொண்டு வரவேண்டும் என நான் விரும்புகிறேன். மக்களும் அதைத் தான் எதிர்பார்க்கிறார்கள். நாம் மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும். நான் கட்சி ஆரம்பிப்பேன். பொறுமையாக நான் சொல்வதை கேட்டு என்னுடன் இருந்தால் இருங்கள். மீடியாக்களைப் பற்றி பொருட்படுத்தாதீர்கள். அவர்கள் நாலு நாள் செய்தி போடுவார்கள். அப்புறம் மறந்துவிடுவார்கள்.

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டில் உள்ளவர்களின் மனதிலும் ரஜினி இருக்கிறார். புதிதாக வருபவர்கள் தான் தங்களை பிரபலபடுத்த வேண்டும். ஆறு மாத முன்பிருந்தே நான் கத்திக் கத்திப் பேசினாலும் யார் மனதிலும் பதியாது. எலக்ஷனுக்குக்கு ஒரு மாதத்திற்கு முன்பு நான் பேசினால் போதும்.
ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொருத்தர் மனதிலும் பதிய வேண்டும்.
கடைசி ஒரு மாதத்திற்கு கடுமையான உழைப்போம்.
கண்டிப்பாக எந்த தேசியக் கட்சியுடனும் கூட்டு இல்லை
எந்த கட்சியினரையும் தாக்கிப் பேச வேண்டாம். சந்தித்து பேச வேண்டாம்
ஒவ்வொரு தொகுதியிலும் தேர்தல் செலவை நான் பார்த்துக் கொள்கிறேன்.
கட்சி தொடங்கினால் நான் முதல்வர் வேட்பாளர் கிடையாது என என்னுடைய முடிவை ஏத்துக்கிறவங்க என்னோட இருக்கலாம். வருங்கால முதல்வரே என போஸ்ட் அடிப்பதை தவிர்த்து விடுங்கள்.
என் உடல் நிலையும் சரியாக இல்லை. பிறந்த நாளை எளிமையாக கொண்டாடுங்கள்.
தேர்தலில் நிற்கிறோம். மக்கள் ஆதரித்தால் செயல்படுவோம் இல்லையா… அமைதியாக ஒதுங்கி விடுவோம்” என முடித்துக் கொண்டு புறப்பட்டார்.

“தேர்தல் செலவை நானே ஏற்கிறேன் என சொல்லியிருக்கிறாரே.. எப்படி..?” என கேள்வி எழுப்பிய போது…
“ஏற்கனவே முடித்த 2 படத்தின் வருமானமும், அண்ணாத்தே படத்தின் வருமானத்தையும் அரசியல் கட்சியில் செலவு செய்ய இருக்கிறார்” என்றார் ரஜினி மன்றத்தின் அந்த முக்கிய நிர்வாகி.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.