திருச்சி எம்எல்ஏவுக்கு வாழ்த்து சொல்ல கிளம்பிய உடன்பிறப்புகள் அடாவடி-அதிரடி காட்டிய எஸ்பி

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

திருச்சி எம்எல்ஏவுக்கு வாழ்த்து சொல்ல கிளம்பிய உடன்பிறப்புகள் அடாவடி-அதிரடி காட்டிய எஸ்பி

திருச்சி மத்திய ரயில் நிலையத்தில் நேற்று 1/12/2020 இரவு மதுரையில் இருந்து சென்னை வரை செல்லும் பாண்டியன் 02638 வண்டியில் பயணம் செய்து வந்த மாற்று திறனாளியை குடிபோதையில் தாக்கிய கும்பலால் பரபரப்பு..

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

மதுரை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது-40) மாற்றுத்திறனாளியான இவர் திரைத் துறையில் உதவி இயக்குனராக சென்னையில் பணிபுரிந்து வருகிறார். நேற்று 01/12/2020 இரவு மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக பாண்டியன் ரயிலில் coach No B4.35 பயணித்துள்ளார். அதே பெட்டியில் திருச்சியை சேர்ந்த திமுக பிரமுகர் ஒருவரின் பிறந்த நாளுக்காக சென்னைக்கு பயணித்து வந்த காளிதாஸ் (வயது-43) ,மகேந்திரன் (வயது- 36), கார்த்தி (வயது -29) ,மூர்த்தி (வயது-54) ,குணசேகரன் (வயது -61) கவுன்சிலர் ஒருவரும் , மது அருந்திவிட்டு போதையில் தகாத கொச்சை வார்த்தைகளில் அவர்களுக்குள் பேசி கொண்டு வந்துள்ளனர்.

மாடூலர் கிச்சனை வீடியோவாக காண இங்கே கிளிக் செய்யவும்...

இதனால் அதே பெட்டியில் பயணித்து வந்த பயணிகளுக்கு பெரும் இடையூறாக இருந்ததால் பெண்கள் சிலர் வெளியே சொல்லமுடியாமல் அருகில் உள்ளவர்களிடம் புலம்பியபடியே வந்துள்ளனர். இதனை கேட்ட பொன்னுசாமி மது போதையில் இருந்த கும்பலிடம் சென்று ரயிலில் நீங்கள் மட்டும் பயணிக்கவில்லை மற்றவர்களும் பயணிக்கிறார்கள் நீங்கள் தகாத கொச்சை வார்த்தைகளை பொதுவெளியில் பயன்படுத்தி பேசி கொண்டு வருவது பலருக்கும் பெரிய இடையூறாக இருந்து வருகிறது என்றுள்ளார். உடனே அந்த கும்பல் நீ யாருடா எங்களை வந்து கேக்குறது நாங்க அப்படிதான் பேசிப்போம் உன்னால என்ன பண்ண முடியும் என்று போதையில் வார்த்தைகளை விளாசி உள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பொன்னுசாமி அவர்களை எதிர்த்து பேசி உள்ளார்.

3

இதனால் ஆத்திரமடைந்த கும்பல் மாற்றுத்திறனாளி என்று கூட பார்க்காமல் தாக்கியுள்ளனர். சரியாக ரயில் திருச்சி ரயில் நிலையத்தை அடையும்போது பிரச்சனை மேலும் பெரிதாக செல்ல பணியிலிருந்த ரயில்வே இருப்புப் பாதை காவல் உதவி ஆய்வாளர் லட்சுமி சம்பந்தப்பட்டவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்து வந்தார். அதற்குள் தகவல் சென்னை ரயில்வே ஐஜி வரை செல்ல  தகவலறிந்து திருச்சி ரயில்வே காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் நள்ளிரவு திருச்சி ரயில் நிலையத்தில் உள்ள இருப்புப்பாதை காவல் நிலையத்திற்கு வருகை குறித்து விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யுமாறு உத்தரவிட்டார். பின்னர் பாதிக்கப்பட்ட பொன்னுசாமி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது.

-ஜித்தன்

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.