ராம் சரணின் ‘பெத்தி’ ஷூட்டிங் ஆரம்பம்!
தெலுங்கு சினிமாவின் ‘குளோபல் ஸ்டார் ராம்சரண் & டைரக்டர் புஜ்ஜிபாபு சனா காம்பினேஷனில் உருவாகும் ‘பெத்தி’ தெலுங்குப் படத்தின் ஷூட்டிங் ஹைதரபாத்தில் ஆரம்பமானது. ராம்சரணுக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடிக்கிறார். கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் மிக முக்கிய கேரக்டரிலும் மற்ற கேரக்டர்களில் ஜெகபதி பாபு, திவ்யேந்து ஷர்மா உட்பட பலர் நடிக்கின்றனர்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ், விருத்தி சினிமாஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன. இசை : ஏ.ஆர்.ரகுமான், ஒளிப்பதிவு : ஆர்.ரத்னவேலு, எடிட்டிங் : நவீன் நூலி, தயாரிப்பு வடிவமைப்பு : அவிநாசி கொல்லா, நிர்வாகத் தயாரிப்பு : வி.ஒய்.பிரவீன் குமார், பி.ஆர்.ஓ. : யுவராஜ்.
2026 மார்ச்.27ஆம் ராம் சரணின் பிறந்த நாளன்று ரிலீசாகும் ‘பெத்தி’க்காக தனது உடலமைப்பையும் லுக்கையும் டோட்டலாக மாற்றியுள்ளாராம் ராம் சரண்.
— மதுரை மாறன்