ராமஜெயம்-சிபிசிஐடி-சிபிஐ
திருச்சியில் நடந்த மிகப்பெரிய மாநாடுகளை முன்னின்று நடத்தியவர் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேருவுக்கு பலம் அவரது தம்பிகள் தான். அதில் ராமஜெயம் நேருவின் நிழலாகவே வாழ்ந்தார். ராமஜெயம் மறைந்து ஐந்து வருடங்களாகிறது. கே.என்.நேரு முழுநேர அரசியலாக மாறியதால் ராமஜெயம் குடும்பத்தையும் வியாபாரத்தையும் கண்ணும் கருத்துமாக பார்த்து பார்த்தார்.
மிகப்பெரிய தொழில் அதிபராக வளர்ந்தாலும் இந்தியாவிலே இல்லாத அளவிற்கும் வெளிநாட்டினரே வியக்கும் அளவிற்கு மிகப்பெரிய கல்வி வளாகம் அமைக்க வேண்டும் என்பது அவருடைய தீரா ஆசை இருந்தது,
ஓரு குழந்தை அந்த கல்வி வளாகத்திற்கு நுழைந்தால் பிரிகேஜி முதல் முனைவர் பட்டம் வரைக்கும் படித்து செல்ல வேண்டும் என்கிற ராமஜெயத்தின் ஆசையில் உருவாக்கப்பட்டது தான் கேர் கல்லூரி, பொறியியல், கட்டிடக்கலை, சி.பி.எஸ்.சி. மருத்துவம், அனைத்து துறைகளும் சேர்ந்த படிப்புகள் ஓரே வாளகத்தில் இருக்கும் வேண்டும் என்று ஆசைப்பட்டார். வகுப்பறைகளை தமிழகத்தில் எந்த கல்லூரிகளிலும் இல்லாத அளவுக்கு மரம் சூழ, காற்றோட்ட வசதிகளுடன் இயற்கையான வெளிச்சத்துடன் வகுப்பறைகளை, கல்லூரி வடிவமைத்தார்.
2020க்குள் தமிழகத்தில் தலைசிறந்த கல்லூரியாக கேர் கல்லூரியை கொண்டு வந்துவிட வேண்டும் என்கிற கனவு அவருக்குள் இருந்து கொண்டே இருந்தது.
எதையும் மின்னல் வேகத்தில் முடிக்கவேண்டும் என்கிற திறனும், யாரும் எதிர்பார்க்காத சிந்தனையும் அதை செயல்படுத்தும் விதமும் ராமஜெயத்தை நேரில் பார்க்க முடியாதவர்கள் ராமஜெயத்தை நேரில் பார்த்த சிலர் சொன்ன கற்பனைகள் எல்லாம் ராமஜெயத்தை பற்றிய பல்வேறு வகையான யுகங்களுக்கும், அவரை பற்றிய பிம்பங்கள் கற்பனையாக பரவ ஆரம்பித்தன் விளைவு தான் 2011 சட்டமன்ற தேர்தல் முடிந்தவுடன் ஜெ. தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டவுடன் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது நில அபகரிப்பு சட்டம் மூலம் பல்வேறு வழக்குகள் பாய்ந்தது.
17க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டு அத்தனை வழக்குகளில் இருந்து ஜாமீன் பெற்று வெளியே வந்தவர். வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் மூலம் அனுமதி வாங்கினார் ராமஜெயம் . ஆனால் காவல்துறையும், பாஸ்போட் அதிகாரிகளும் பாஸ்போட்டை கொடுக்காமல் இழுத்தடித்து கொண்டே இருந்தனர்.
இந்த நிலையில் தான் திருச்சி மாநகர கமிஷனர் மீதும், பாஸ்போட் அதிகாரி மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடந்து விசாரணைக்கு தேதி உத்தரவிட்ட நிலையில் தான் ராமஜெயம், கடந்த 29.3.2012-ல் காலையில் காணமல் போனவர் காவிரி கரையில் உள்ள முட்புதரில் கொலை செய்யப்பட்டார்.
அப்போது இருந்த திருச்சி கமிஷனர் சைலேஷ் குமார் யாதவ் மற்றும் ஏசிஎஸ்பி ஜெயசந்திரன் ( திவாகரன் சம்மந்தி ) தலைமையிலான தீவிரமாக விசாணையில் இறங்கினார். தீடீர் என கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் விடுமுறையில் சென்ற போது அப்போது டி.ஐ.ஜியாக இருந்த அமல்ராஜ் விசாரணையில் இறங்கி கொலை வழக்கை விசாரிக்கும் தனிப்படை போலிசார் மீது குற்றசாட்டு கிளம்ப அந்த தனிப்படை காவல்துறை அதிகாரிகளை வேறு மாவட்டத்திற்கு தூக்கியடிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் தமிழக காவல்துறை டிஜிபி ராமனுஜம் நேரடியாக திருச்சிக்கு வந்து விசாரணை செய்து சி.பி.சி.ஐ.டிக்கு விசாரணைக்கு உத்தரவிட்டார்.
சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். கொலை நடைபெற்று 5 ஆண்டுகளாகியும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.
குறிப்பாக சி.பி.சி.ஐ.டி போலிசார் விசாரணையில் ராமஜெயம் குடும்பத்தினர் கொடுத்த தகவல்களையும் எதையும் கருத்தில் கொள்ளாமல் ஏதோ ஒரு உள்நோக்கத்தோடு விசாரித்துக்கொண்டிருக்கிறார்.
இவர் விசாரித்தால் நியாயம் கிடைக்காது. உண்மையான குற்றவாளியை கைது செய்ய மாட்டார்கள் என்று எனது கணவர் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரி அவரது மனைவி லதா கடந்த 2014 டிசம்பரில் உயர் நீதிமன்ற கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு பல்வேறு நீதிபதிகளிடம் இதுவரை 21 முறை விசாரணைக்கு வந்தது. சிபிசிஐடி போலீஸார் ஒவ்வொரு முறையும் விசாரணை தொடர்பாக ரகசிய அறிக்கையை தாக்கல் செய்து, குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம், விரைவில் கைது செய்துவிடுவோம், கொலை குறித்து முக்கிய தகவல் கிடைத்துள்ளது என பல்வேறு காரணங்களை கூறி அவகாசம் பெற்றனர். இந்த வழக்கில் சிபிஐடி போலீஸார் இதுவரை 12 ரகசிய அறிக்கைகளை தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி பஷீர் அகமது முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் வாதிடும்போது, இந்த வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் இரு முறை இறுதி கெடு விதித்தது. அதன் பிறகும் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை.
சிபிஐயில் போதிய காவலர்கள் பற்றாக்குறை இருப்பதால், விசாரணையை மாற்ற வேண்டாம் என சிபிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஒரு வழக்கை நீதிமன்றம் சிபிஐக்கு மாற்றினால், அந்த வழக்கை விசாரிப்பதற்கு தேவையான காவலர்களையும், கட்டமைப்பு வசதிகளையும் வழங்க நீதிமன்றமே உத்தரவிடலாம். இதனால் சிபிஐக்கு விசாரணையை மாற்ற வேண்டும் என்றார்.
அரசு வழக்கறிஞர் கந்தசாமி வாதிடும்போது, ராமஜெயம் கொலைக்கு நூற்றுக்கு மேற்பட்ட காரணங்கள் உள்ளன. குடும்ப பிரச்சினை, தொழில்போட்டியில் கூட அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம். வழக்கமாக நண்பர்கள் புடைசூழ நடைபயிற்சிக்கு செல்லும் ராமஜெயம், கொலை நடைபெற்ற அன்று தனியாக நடைபயிற்சிக்கு சென்றுள்ளார். விசாரணைக்கு ராமஜெயம் குடும்பத்தினர் ஒத்துழைக்க மறுக்கின்றனர். யாரோ ஒருவரை குற்றவாளியாக்கி வழக்கை முடிக்க நினைக்கவில்லை. உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்கும் நோக்கத்தில் சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதற்கு மேலும் அவகாசம் வழங்க வேண்டும் என்றார்.
இதற்கு மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் மற்றும் ஆட்சேபம் தெரிவித்தார். அவர் வாதிடும் போதும் சிபிசிஐடி போலீஸாருக்கு ராமஜெயத்தின் குடும்பத்தினர் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். போலீஸார் கேட்ட அனைத்து ஆவணங்களையும் அளித்துள்ளனர் என்றார்.
விசாரணையின் போது குறுக்கிட்ட நீதிபதி, சிபிசிஐடி போலீஸாரில் ஒவ்வொரு விசாரணை அறிக்கையிலும், முந்தைய அறிக்கையில் கூறப்பட்டிருந்ததை வார்த்தை மாறால் அடுத்த விசாரணையில் அப்படியே குறிப்பிடப்பட்டுள்ளது. இறுதியாக கூடுதல் அவகாசம் கோரி ஒரு பாரா இணைக்கப்பட்டுள்ளது. அவ்வளவு தான். விசாரணை அறிக்கைகளை பார்க்கையில் விசாரணையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக தெரியவில்லை என தன்னுடைய சந்தேகத்தை வெளிப்படுத்தி இந்நிலையில், இந்த வழக்கு (7.11.2017)-ல் விசாரணைக்கு வந்தது.
ராமஜெயம் கொலை வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி நீதிபதி பஷீர் அகமது உத்தரவிட்டார். 3 மாதத்தில் விசாரணையை முடிக்குமாறும் அவர் அறிவுறுத்தினார் வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றுவதாக நீதிபதி அறிவிக்கவிருந்த சூழலில் வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வேண்டுமென அரசு தரப்பு வழக்கறிஞர் கோரினார். அப்போது, நீதிபதி பஷீர் அரசு தரப்பு வழக்கறிஞரை கடுமையாக சாடினார். தொடர்ந்து இதேமாதிரி அவகாசம் கேட்பது ஆட்சேபணத்துக்குரியது என்றார்.
ராமஜெயம் தரப்பில் இரண்டு வருட நீண்ட சட்ட போராட்டத்திற்கு பிறகு ராமஜெயம் கொலை வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டிருப்பது அடுத்த கட்ட முன்னேற்றத்தை அடைந்துள்ளது.தொடரும்…