அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

ராமஜெயம் கொலை வழக்கு பிரபல ரவுடிகள் 12 பேர் மீது உண்மை கண்டறியும் சோதனை பட்டியல் வெளியீடு

0

திருச்சியில் அடகு நகையை விற்க

 

ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலன் விசாரணைக் குழுவினர், விசாரணைக்கு அழைத்துச் செல்பவர்களை துன்புறுத்துவதாக தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக நகராட்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம், கடந்த 2012-ம் ஆண்டு நடைபயிற்சி சென்ற போது  கொலை செய்து எரிக்க முயற்சி முறையில் அவரது உடல் திருச்சி – கல்லணை சாலையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

சாமிரவி

 

ராமஜெயம் கொலை வழக்கை எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையிலான சிறப்பு புலன் விசாரணைக் குழு விசாரித்து வருகிறது.

https://www.livyashree.com/

வழக்கு தொடர்பாக சந்தேகப்படும் நபர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

திருமண நிகழ்ச்சியில் – ஊன்று கோலுடன்

விசாரணைக்காக அழைத்து செல்லும் நபர்களை துன்புறுத்துவதாக, சிறை கைதிகள் உரிமை மையத்தின் இயக்குநர் வழக்கறிஞர் புகழேந்தி, தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு அளித்தார். அதில், இந்த குழு சட்டத்துக்கு உட்பட்டு செயல்படுகிறதா என்பதை கண்காணித்து மனித உரிமை மீறலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

சகோதரர் ரவிசந்திரனுடன்

இதற்கு இடையே தமிழக போலிசார் டிஜிபி உத்தரவின் பெயரில் தமிழகம் முழுவதும் பிரபல ரவுடிகள் ஆயிரக்கணக்கில் சிக்கினார்கள், அவர்களில் முக்கியமான ரவுடிகளிடம் நெருக்கமான முறையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தமிழக முதல்வரும் ராமஜெயம் வழக்கு சம்மந்தமாக விசாரணையின் போக்கு குறித்து அவ்வப்போது விசாரணை அதிகாரிகளிடம் கேட்டறிந்து வருகிறார்.

தம்பி ராமஜெயம் – சிலையுடன் கே.என்.நேரு

 

இந்த நிலையில் ராமஜெயம் கொலை வழக்கில் – 21.10.22 இன்று இது வரை விசாரணை செய்ததில் சந்தேகத்திற்கு இடமான முறையில் உள்ள 20 சந்தேக நபர்கள் டிஜிபி ஷகில் அக்தர் முன்பு  11 மணிக்கு ஆஜராக உள்ளனர். அவர்களிடம்  உண்மை கண்டறியும் சோதனை திருச்சியில் நடைபெற்றது.

மோகன்ராம் குரூப்
மோகன்ராம் குரூப்

ஏற்கனவே நீதிமன்றத்தின் அனுமதி பெற்றுள்ள சி.பி.சி.ஐ.டி போலீசார்  ராமஜெயத்தின் உதவியாளர்களாக வேலைபார்த்த மோகன், நந்தகுமார் ஆகியோருக்கு சி.பி.ஐ. உதவியுடன் சென்னையில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முறை 20 பேர் என்பதால் அவர்களிடம் சோதனைக்கு பிறகு வழக்கில் முக்கியம் திருப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்கிறார்கள்..

இதற்கு அடுத்த கட்டமாக… தமிழகத்தின் பிரபல ரவுடிகள் 12 பேர் சாமிரவி, திண்டுக்கல் மோகன்ராம், நரைமுடி கணேசன், மாரிமுத்து , சீர்காழி சத்தியராஜ், தினேஷ், திலீப் என்கிற லட்சுமி நாராயணன், தென்கோவன் என்கிற சண்முகம், ராஜ்குமார், சிவகுணசேகரன், சுரேந்தர், கலைவாணன் ஆகியோர் உண்மை கண்டறியும் சோதனை செய்யப்படுகிறது, இவர்கள் அனைவரும் 01.11.2022 அன்று  சிபிசிஐடி நீதிமன்றத்தில் ஆஜர் ஆக உத்தரவிடப்பட்டுள்ளது. 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.