வெளியே கோடை மழை! உள்ளே வாழ்த்து மழை ! பிரசாந்த் வெரி ஹேப்பி!
ஏப்ரல் 06-ஆம் தேதி டாப் ஸ்டார் பிரசாந்தின் 53-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை தியாகராய நகரில் உள்ள பிரசாந்த் கோல்டு டவர்ஸ் பில்டிங்கில் தமிழ் சினிமாவின் விஐபிக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அவரை வாழ்த்திப் பேசினார்கள். மகனின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் வகையில் பிரசாந்த் ஹீரோவாக நடிக்கும் ‘ரஞ்ஜன் –தி அட்வகேட்’ என்ற படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக்கை விஐபிக்களை வைத்து வெளியிட்டார் படத்தின் தயாரிப்பாளர் & டைரக்டர், பிரசாந்தின் தந்தை தியாகராஜன்.
தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளர் கதிரேசனின் மகன் ஹரி, நடிகை தேவயானியின் மகள் பிரியங்கா ஆகிய இருவரும் இந்தப் படத்தில் இளம் ஜோடிகளாக அறிமுகமாகிறார்கள். தெலுங்கில் மெகா ஹிட்டான ‘கோர்ட் -ஸ்டேட் வெர்சஸ் நோபடி’யின் ரீமேக் தான் தமிழில் ‘ரஞ்ஜன்’-ஆக் எண்ட்ரியாகிறார்.
பிரசாந்தை வாழ்த்தியவர்கள்….
தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, கார்த்திகேயன் சந்தானம், ஃபைவ் ஸ்டார் செந்தில், ஃபைனான்சியர் கமல் போரா, டைரக்டர்கள் கே.எஸ்.ரவிக்குமார், ஆர்.கே.செல்வமணி, ஆர்.எஸ்.துரை செந்தில்குமார், வெற்றிமாறன், சரண், ஸ்ரீகணேஷ், வினோத் கார்த்திக், கணேஷ் கே.பாபு, நடிகர்கள் விஷால், சந்தோஷ் பிரதாப் ஆர்.கே.சுரேஷ், நடிகைகள் தேவயானி, கிரண் ஆதிரா, செம்மலர் அன்னம், மியூசிக் டைரக்டர் ஜி.வி.பிரகாஷ் உட்பட பலர்.
காலை 11.45 மணிக்கு விழா தொடங்கியதுமே சென்னையில் கோடை மழை பெய்து மக்களை குளிர்வித்தது. கோல்டு டவர்ஸின் உள்ளே சினிமா விஐபிக்களின் வாழ்த்து மழையால் மனம் குளிர்ந்தார்கள் தந்தை தியாகராஜனும் தனயன் பிரசாந்தும்.
— ஆண்டவர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.