திருச்சியில் 35 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை கொலை !

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகா, புள்ளம்பாடி அருகே உள்ள சிறுகளப்பூரில் உள்ள ஏரியில் தமிழ்ச்செல்வி (வயது 35) மதிக்கத்தக்க பெண், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு  கொடூரமாக கொலை  செய்து கை கால்கள் கட்டப்பட்ட நிலையில், ஏரியில் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

ஏரியின் நடுவில் முள்களுக்கு இடையே சிக்கியிருந்த உடலை, இலால்குடி மற்றும் புள்ளம்பாடி தீயணைப்பு படை வீரர்கள் மீட்டனர். பாலியல் குற்றவாளிகளுடன் கடுமையாக போராடியதற்கு அடையாளமாக, உடைந்த வளையல்கள், துண்டு, கைப்பேசி, இரத்தம் படிந்த குச்சி ஆகியவை சம்பவ இடத்தில் இருந்ததாக கிராம மக்கள் தெரிவிக்கிறார்கள்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

இப்படி ஒரு சம்பவத்தை உள்ளூரை சேர்ந்தவர்கள் செய்திருக்க வாய்ப்பிலை என்றும்; சுற்றுவட்டார பகுதியில், காற்றாலை நிறுவனத்தில்  தங்கி பணிபுரிந்து வரும் வடமாநில இளைஞர்களை போலீசார் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர வேண்டும் என்கிறார்கள். காணக்கிளியநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.