*ரவி மோகனின் முதல் தயாரிப்பு’ ப்ரோ கோட் (BroCode)*

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ரவிமோகன் ஸ்டுடியோஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்துள்ளார் ரவி மோகன் (எ) ஜெயம் ரவி. இதன் முதல் தயாரிப்பிற்கு  ‘ப்ரோகோட்- ( BroCode)’ என பெயரிடப்பட்டிருக்கிறது. கதையின் நாயகனாக ரவி மோகன், இவருக்கு ஜோடியாக நான்கு டாப் ஹீரோயின்கள். படத்தின் ஷூட்டிங் செப்டம்பரில் ஆரம்பம்.

ப்ரோ கோட்(BroCode)‘டிக்கிலோனா’, ‘வடக்குப்பட்டி ராமசாமி ‘  படங்களின் இயக்குநர் கார்த்திக் யோகி தான் டைரக்டர். நடிகர் எஸ். ஜே. சூர்யா  முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.   ‘போர் தொழில்’ படத்தின்  கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ‘அனிமல்’, ‘அர்ஜுன் ரெட்டி’  படங்களுக்கு இசையமைத்த  ஹர்ஷவர்தன் இசையமைக்கிறார்.  படத்தொகுப்பு : பிரதீப் ஈ. ராகவ் , கலை இயக்குநர் : ஏ . ராஜேஷ்.

Sri Kumaran Mini HAll Trichy

Flats in Trichy for Sale

ப்ரோ கோட்(BroCode)படத்தைப் பற்றி இயக்குநர் என்ன சொல்றாருன்னா , “இப்படத்தின் கதையை ரவி மோகனிடம் சொன்ன போது போது மிகவும் ரசித்தார். அத்துடன் படத்தை தயாரிக்கவும் முன்வந்தார். இப்படத்தில் ஸ்லாப்ஸ்டிக் பாணியிலான நகைச்சுவை காட்சிகள் இருக்கு.  படம் ரசிகர்களுக்கு வித்தியாசமான திரை அனுபவத்தை வழங்கும் ” என்கிறார். தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்து முதல் படத்தையும் தொடங்கி விட்டாலும்  இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் ‘பராசக்தி ‘  இயக்குநர் கணேஷ் கே . பாபு இயக்கத்தில் ‘கராத்தே பாபு ‘ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ரவி மோகன்.

 

—   மதுரை மாறன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.