ரியல் எஸ்டேட் பில்டர்களுக்கு TNRERA வைத்த பெரிய ஆப்பு!

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

இனி ஒரு டாக்குமெண்ட் மிஸ் ஆனா கூட அப்ளிகேஷன் உடனே ரிட்டர்ன் ! 30 நாள் டைம் கூட கிடையாது!*
தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் (TNRERA) பில்டர்களுக்கு அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது. TNRERA தலைவர் பிறப்பித்துள்ள சுற்றறிக்கையில், இனி ரியல் எஸ்டேட் திட்ட பதிவுக்கு அரைகுறை ஆவணங்களை கொடுத்தால் உடனே விண்ணப்பம் திருப்பி அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNRERA
TNRERA

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

என்ன நடந்தது?
இதுவரை பல பில்டர்கள் TNRERA ஆன்லைன் போர்ட்டலில் லேஅவுட் / கட்டிட திட்டங்களை பதிவு செய்யும்போது தேவையான சரியான ஆவணங்களை பதிவேற்றாமல், காலி டாக்குமெண்டுகளை வைத்து விண்ணப்பித்து வந்தனர். இதனால் அதிகாரிகள் கேள்வி கேட்டு, 30 நாள் அவகாசம் கொடுத்து, மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு, பதிவு பிரிவுக்கு தேவையில்லாத வேலைப்பளு மற்றும் தாமதம் ஏற்பட்டு வந்தது.
இதை தடுக்கவே இந்த அதிரடி உத்தரவு.

இனி இந்த 4 தவறுகள் இருந்தால் உடனே Application Return!
ஆரம்பக்கட்ட பரிசீலனையிலேயே (Initial Scrutiny) கீழ்கண்ட 4 குறைபாடுகள் இருந்தால், எந்த கேள்வியும் கேட்காமல், வழக்கமாக கொடுக்கப்படும் 30 நாள் பதில் அவகாசம் கூட கொடுக்காமல், உடனடியாக விண்ணப்பம் திருப்பி அனுப்பப்படும்.
1. காலி டாக்குமெண்ட்: விண்ணப்பத்தில் குறிப்பிட்ட இடத்தில் காலி / வெற்று ஆவணத்தை பதிவேற்றினால்
2. Form-5 இல்லை: விண்ணப்பத்துடன் Form-5 பதிவேற்றம் செய்யவில்லை என்றால்
3. Site Photo இல்லை: திட்டத்தின் தேவையான இடத்தில் புகைப்படங்களை பதிவேற்றவில்லை என்றால்
4. Form-B இல்லை: Form-B பதிவேற்றவில்லை அல்லது தேவையான கையெழுத்து இல்லாமல், குறிப்பிட்ட முத்திரைத்தாளில் இல்லாமல் பதிவேற்றினால்
எப்போது முதல் அமல்?
இந்த புதிய விதி 12.10.2026 முதல் அமலுக்கு வந்துவிட்டது. அதற்கு முன் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து விண்ணப்பங்களுக்கும் இது பொருந்தும் என்றும், பரிசீலனை அதிகாரிகள் எந்த விலகலும் இல்லாமல் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

சரவணன் சி.பி.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.