காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்திய இராணுவத்தில் சேர்வதற்கான ஆட்சேர்ப்பு முகாம் !
இந்திய இராணுவ ஆட்சேர்ப்பு பேரணி இந்திய இராணுவப் படையினரால் 05.02.2025 முதல் 15.02.2025 வரை இந்திய இராணுவத்தில் சேர்வதற்கான ஆட்சேர்ப்பு பேரணி, காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பேரறிஞர் அண்ணா விளையாட்டுத் திடலில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஆட்சேர்ப்பு பேரணியில் சிப்பாய், மருத்துவ உதவியாளர் பணிக் காலியிடங்களுக்கு 2024 பிப்ரவரி மாதத்தில் வெளியான அறிவிக்கை வாயிலாக நடத்தப்பட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே கலந்து கொள்ளமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட மாணவர்கள் உடற்தகுதி தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இம்முகாமில் கலந்து கொள்ள தங்களது அனுமதிச்சீட்டு, கல்விச்சான்றுகள், உறுதிமொழி ஆவணம், காவல்துறை நன்னடத்தைச் சான்று, பள்ளி நன்னடத்தைச் சான்று, கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து பெறப்படும் நன்னடத்தைச் சான்று மற்றும் புகைப்படத்துடன் கூடிய திருமணமாகாத சான்று, சாதிச்சான்று, மதச்சான்று, இருப்பிடச்சான்று, கடந்த மூன்று மாதத்திற்குள் எடுக்கப்பட்ட சமீபத்திய கடவுச்சீட்டு அளவுள்ள புகைப்படம், தேசிய மாணவர் படைச் சான்று, விளையாட்டுவீரர் சான்று, ஆதார் அட்டை மற்றும் பான்கார்டு ஆகியவற்றை உடன் கொண்டுவர வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.joinindianarmy.nic.in என்ற இந்திய இராணுவத்தின் இணையதளத்தை பார்வையிடவும்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இது தொடர்பான மேலும் தகவல்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழி காட்டும் மையத்தினை நேரிலோ அல்லது 0431-2413510, 94990-55901 ரூ94990-55902 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொண்டு இந்த நல்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதீப் குமார்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.