திருச்சி – தொழிற்பழகுநர் (அப்ரண்டீஸ்) சேர்க்கை முகாம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திறன் மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவு அமைச்சரகம் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சித்துறை சார்பில் சிறு மற்றும் குறு  தொழில் நிறுவனங்களில் தொழிற் பழகுநர்களை நியமனம் செய்வதை ஊக்குவிக்கும் விதமாக திருச்சி மாவட்டத்தில் மண்டல அளவிலான தொழிற்பழகுநர் மேளா சேர்க்கை முகாம் வருகிற ஜனவரி 31ஆம் தேதி (வெள்ளிகிழமை) காலை 10 மணி அளவில் திருச்சி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடக்கிறது.

தொழிற்பழகுநர் (அப்ரண்டீஸ்) சேர்க்கை முகாம்
தொழிற்பழகுநர் (அப்ரண்டீஸ்) சேர்க்கை முகாம்

அங்குசம் இதழுக்கு தொடர்ந்து தோள் கொடுங்கள் !

இந்த சேர்க்கை முகாமில் இதுவரை தொழிற்பழகுநர் பயிற்சி (அப்ரண்டிஸ்) பெறாதவர்களை மற்றும் 2021-22, 2022-23, 2023-24 ஆகிய வருடங்களில் தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐ பயிற்சியாளர்கள், 8ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 10,12ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வியடைந்த இளைஞர்கள் (ஆண், பெண் இருபாலரும்) மற்றும் Degree,Diploma முடித்தவர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

திருச்சி மாவட்டத்தில் உள்ள சிறு மற்றும் குறு நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த முகாம் மூலம் சுமார் 1000-க்கும் மேற்பட்ட தொழிற் பழகுநர்கள் இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பயிற்சியின் போது உதவித் தொகைமாதம் ரூ.7700/-முதல் ரூ.12,000/-வரை நிறுவனத்தாரால் வழங்கப்படும் தொழிற்பழகுநர் சட்டம் 1961ன் படி இந்த நிறுவனங்களில் சேர்ந்து ஓராண்டு தொழிற்பழகுநர் பயிற்சி பெறுபவர்களுக்கு மத்திய அரசின் தேசிய தொழிற் பழகுநர் சான்றிதழ் வழங்கப்படும். எனவே மாணவர்கள் இந்த சேர்க்கை முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மேலும் இது தொடர்பான விவரங்களை அறிய திருவெறும்பூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை நேரிலோ அல்லது 9443644967 என்ற அலைப்பேசி எண்ணிலோ அல்லது 0431-2553314 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதீப் குமார், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.