திருப்பரங்குன்றம் கோவில் வழிபாடு, அனுமதி மறுத்த காவல்துறை – மதுரை ஆதீனம்
மக்கள் அவரவர் சமயத்தில் வழிபாடு நடத்த வேண்டும் யார் மதத்தையும் புண்படுத்தக் கூடாது இதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன்,மதுரையில் ஆதீனம் பேட்டி
மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் வழிபாடு நடத்துவதற்காக மதுரை ஆதீன மடத்திலிருந்து புறப்பட்ட மதுரை ஆதீனத்தை காவல்துறையினர் அனுமதி மறுத்தனர், பாதுகாப்பு காரணத்திற்காக அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதாக காவல்துறையினர் கூறியதை அடுத்து மதுரை ஆதீனம் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் …

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்ல என்னை அனுமதிக்கவில்லை. காசி விசுவநாதர் கோவிலுக்கு சென்றால் காவல்துறை பாதுகாப்பு அளிக்க முடியாது என சொல்லி விட்டார்.
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் சிக்கந்தர் பாட்ஷா தர்காவில் இதற்கு முன்னர் ஒற்றுமையாக வழிபாடு நடத்தி வந்தனர்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
திருப்பரங்குன்றம் மலைக்கு கீழே ஒரு சைவ கோவிலும், மேல ஒரு சைவ கோவில் உள்ள நிலையில் இடையில் உள்ள தர்காவில் வழிபாடு நடத்துவதில் தவறில்லை, ஆனால் அசைவ உணவு கொண்டு சென்று சாப்பிடலாமா? திருப்பரங்குன்றம் மலை என்ன கசாப்பு கடையா? திருப்பரங்குன்றம் மலையில் ஆட்டை அறுத்து வழிபாடு நடத்த கூடாது மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

ஒரு மதத்தை புண்படுத்தும் விதமாக நடந்து கொள்ள கூடாது, மக்களால் தேர்வு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அசைவ உணவு அருந்தும் நிகழ்வில் கலந்து கொண்டிருக்க கூடாது, மக்கள் அவரவர் சமயத்தில் வழிபாடு நடத்த வேண்டும் யார் மதத்தையும் புண்படுத்தக் கூடாது இதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன்.
பின்னர் திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் பள்ளிவாசலில் தொலுகை நடத்த மட்டுமே அனுமதிக்க வேண்டும், வழிபாடு தவிர பிற நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும்” என கூறினார், பின்னர் ஆதினம் வழிபாடு நடத்த காவல்துறை அனுமதிக்காததை கண்டித்து பாஜகவினர் ஆதின மடம் வாசலில் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள், காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தி போராட்டக்காரர்களை கலைந்து செல்ல செய்தனர்.
— ஷாகுல், படங்கள்: ஆனந்தன்.