விருதுநகரில் குடியரசு தினத்தில் பல்வேறு அலுவலகங்களில் தேசிய கொடி ஏற்றாமல் அவமதித்த அரசு அலுவலர்கள் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ஜனவரி 26 நாடு முழுவதும் 76 வது குடியரசு தின விழாவை பிரதமர், ஆளுநர்கள், முதலமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள், பள்ளி, கல்லூரி மற்றும் அனைத்து துறை சார்ந்த அரசு அதிகாரிகள் தங்களது துறை சார்ந்த அலுவலகங்களில் இந்திய தேசியக்கொடி ஏற்றி மரியாதை செய்வது வழக்கம்.

தேசிய கொடி ஏற்றப்படாத அரசு அலுவலகங்கள்
தேசிய கொடி ஏற்றப்படாத அரசு அலுவலகங்கள்

திருச்சியில் டைட்டானிக் கப்பலா ? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான பொருட்காட்சி !

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் பகுதியில் பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலகங்களான, பொதுப்பணித்துறை, வேளாண்துறை, கால்நடை மருத்துவமனை, விருதுநகர் மாவட்ட சாத்தூர் கிளை மத்திய கூட்டுறவு வங்கி, தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி, தமிழ்நாடு கிராம வங்கி, கூட்டுறவு அரசு பள்ளி நிறுவனம், மத்திய அரசின் சாத்தூர் துணை அஞ்சலகம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார அலுவலகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம், மத்திய அரசு தொழிலாளர்கள் அரசு ஈட்டு உறுதி வசதி மருந்தகம் & இ. எஸ். ஐ. அலுவலகம், மேலும் சில அரசு அலுவலகங்களிலும், தேசியக்கொடி ஏற்றாமல் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் தேசியக் கொடியை அவமதிக்கும் நோக்கில் செயல்பட்டுள்ளனர்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இது தொடர்பாக குறிப்பிட்ட சில அரசு அலுவலர்களை  தொடர்பு கொண்டு கேட்டபோது, தற்போது செயல்பட்டு வரும் அலுவலகம் விரைவில் இடிக்கப்பட உள்ளதால், தேசியக்கொடி ஏற்றவில்லை என பொறுப்பற்ற பதிலை தெரிவித்தார்.

மக்களுடன் மண்ணச்சநல்லூர் S.கதிரவன் ! நம்ம வீட்டு எம்.எல்.ஏ. !

மதியம் 2 மணிக்கு மேல் தேசிய கொடி ஏற்றப்பட்ட அரசு அலுவலகங்கள்
மதியம் 2 மணிக்கு மேல் தேசிய கொடி ஏற்றப்பட்ட அரசு அலுவலகங்கள்

இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்று மற்றும் சில அரசு அதிகாரிகள் விளக்கம் கேட்டதற்கு பின்பு மதியம் 2 மணிக்கு மேல் அவசரக் கதியில் தேசிய கொடி ஏற்றினார்கள்.

இந்திய அரசியலமைப்பு சட்டம் சொல்வது என்னவென்றால், 1971 தேசிய கொடி அவமதித்தல் சட்டத்தின்படி 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை,  அபராதம் விதிக்கப்படும்  அல்லது  இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என சட்டம் சொல்கிறது.

மாவட்டம் முழுவதும் இது போன்ற தேசியக் கொடியை அவமதிக்கும் நோக்கில் செயல்பட்ட அரசு அதிகாரிகளை மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

 

  —  மாரீஸ்வரன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.