பட்டுக்கோட்டை அழகிரியின் 123வது பிறந்த நாள்: அரசு சார்பில் மரியாதை செலுத்திய தஞ்சை கலெக்டர்!
பட்டுக்கோட்டை அழகிரியின்
123வது பிறந்த நாள்:
அரசு சார்பில் மரியாதை
செலுத்திய தஞ்சை கலெக்டர்!
‘அஞ்சா நெஞ்சன் அழகிரி’ என்றழைக்கப்படும் மொழிப்போர் தியாகி பட்டுக்கோட்டை அழகிரிசாமியின் 123வது பிறந்த நாளை முன்னிட்டு பட்டுக்கோட்டையில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு தமிழக அரசின் சார்பில் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மொழிப்போர் தியாகி பட்டுக்கோட்டை அழகிரிசாமியின் தியாக உணர்வை பறைசாற்றும் வகையில் பட்டுக்கோட்டையில் தமிழக அரசு சார்பில் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பட்டுக்கோட்டை அழகிரிசாமியின் 123வது பிறந்த நாள் விழா செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் இன்று கொண்டாடப்பட்டது.
மணிமண்டபத்தில் உள்ள பட்டுக்கோட்டை அழகிரிசாமியின் உருவச் சிலைக்கு தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில்இ முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏனாதி பாலசுப்பிரமணியன், பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் (பொறுப்பு) எல்.குமார், வருவாய்க் கோட்டாட்சியர் பிரபாகரன், நகர் மன்றத் தலைவர் செ.சண்முகப்பிரியா, வட்டாட்சியர் ராமச்சந்திரன், தியாகி அழகிரிசாமியின் பேரன் சுப்பையா ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.