அங்குசம் பார்வையில் ‘தலைநகரம்—2’

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

அங்குசம் பார்வையில் ‘தலைநகரம்—2’

தயாரிப்பு: ‘ரைட் ஐ தியேட்டர்ஸ்’ எஸ்.எம்.பிரபாகரன், துரை வி.இசட். எழுத்து—இயக்கம்: துரை வி.இசட். நடிகர்—நடிகைகள்: சுந்தர் சி., பாலக் லால்வானி, ஆயிரா, தம்பி ராமையா, ‘பாகுபலி’ பிரபாகர், ஜெய்ஸ் ஜோஸ், விஷால் ராஜன், சேரன் ராஜ் மற்றும் டெரர் முகத்துடன் ஐம்பது அறுபது பேர். இசை: ஜிப்ரான், ஒளிப்பதிவு: இ.கிருஷ்ணசாமி, ஸ்டண்ட் டைரக்டர்: டான் அசோக், எடிட்டிங்: ஆர்.சுதர்சன், தமிழக ரிலீஸ்: ஸ்ரீ சுப்புலட்சுமி மூவிஸ், பி.ஆர்.ஓ.சதீஷ்( எய்ம்)

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

நஞ்சுண்டா( பாகுபலி பிரபாகர்), வம்சி( விஷால் ராஜன்), மாறன்( ஜெய்ஸ் ஜோஸ்) இந்த மூன்று பேரும் தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை ஏரியாக்களின் ஆகப்பெரிய தாதாக்கள்.  சென்னையை ஒரே ராஜ்ஜியமாக்கி, அந்த ராஜ்ஜியத்தின் ரவுடி ராஜாவாக உட்கார ஒருவரை ஒருவர் போட்டுத்தள்ள நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த மூன்று ரவுடிகளுக்கும் போலீஸ் டீமும் தனித்தனியே சப்போர்ட் பண்ணுகிறது, அவர்களுக்குள்ளேயே போட்டுக் கொடுத்து, போட்டுத்தள்ள திட்டமும் தீட்டுகிறது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

இந்த மூன்று ரவுடிகளும் வெவ்வேறு காரணங்களுக்காக மாஜி தாதா ‘ரைட்’டை( சுந்தர் சி.) குறிவக்கிறார்கள். அதன் பின் நடக்கும் ரணகள, ரத்த ஆட்டம் தான் இந்த ‘தலைநகரம்—2’.

பிரபல இந்தி நடிகை ஜாக்குலிண் ஃபெர்ணாண்டஸுக்கும் இப்போது டெல்லி திஹார் ஜெயிலில் இருக்கும் பொலிட்டிக்கல் மாஃபியா சுகேஷ் சந்திரசேகருக்கும் உள்ள இல்லீகல்’லிங்க்’கை சின்ன ‘நாட்’டாக கையில் எடுத்து,  மூன்று ரவுடிகளுக்கும் கரெக்டான ஃப்ளாஷ்பேக்கைச் சொல்லி, கதைக்கும் காட்சிகளுக்கும் வலு சேர்த்து, அட்டகாசமான கேங்ஸ்டர் கதையை அசத்தலாக சொல்லியிருக்கிறார் டைரக்டர் துரை வி.இசட்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

ஒரே ஒரு ஃப்ளாஷ்பேக் சீனைத்தவிர, படம் முழுக்க கலர் வேட்டி, முக்கால் கை சட்டையுடன் ‘தலைநகரம்-1’-ல் வந்த தாதா ரைட்டைவிட, இந்த இரண்டாம் பாக ‘ரைட்’ கேரக்டருக்கு செம ரைட்டாக மேட்ச் ஆகியிருக்கிறார் சுந்தர் சி. மாறனின் கையாளான கள்ள நோட்டு மெய்யப்பனின் ஆபீசுக்குள்ளேயே புகுந்து, “இப்ப மெய்யப்பன் இல்லேன்னு சொன்னீல. நான் சொன்னத செய்யலேன்னா அவன் இல்லாமலேயே போய்ருவான்” என தில்லாக மிரட்டும் சீனில் சுந்தர் சி.ரசிக்க வைக்கிறார். ஜாக்குலின் ஃபெர்ணாண்டஸ் கேரக்டரில், அதாவது நடிகையாகவே வருகிறார் பாலக் லால்வானி. இவரை கீப்-அப் பண்ணுபவர் தான் ரவுடி வம்சி. அதாவது சுகேஷ் சந்திரசேகர். இன்னொரு ரவுடி நஞ்சுண்டா, லால்வானியை சக்கையாக்கும் போது, அடச்சே..என்னய்யா இது ஹீரோயினுக்கு வந்த கஷ்டகாலம்னு நினைச்சோம். ஆனா அதுக்கெல்லாம் சேர்த்து க்ளைமாக்ஸுக்கு முன்பாகவே வெயிட் காட்டி, அலேக் போட வைத்துவிட்டார் பாலக் லால்வானி.

ஹீரோயின் லால்வானியைவிட குளுகுளுவென வெண்ணெய் தடவிய பன் மாதிரி ஜம்முன்னு இருக்கார் தம்பி ராமையாவின் மகளாக வரும் ஆயிரா. அட நல்லாவும்  நடிச்சுருக்குங்க பொண்ணு, அத சொல்லாம விட்ருவோமா?

செமையான, தாட்டியமான பாகுபலி பிரபாகர், ஜெய்ஸ் ஜோஸ், விஷால் ராஜன் என மூன்று வில்லன்களை கேங்ஸ்டர் கதைக்கு கச்சிதமாக செலக்ட் பண்ணிருக்கார் டைரக்டர். அதே போல் ரவுடி மாறனாக வரும் ஜெய்ஸ் ஜோஸுக்கு சகலமுமாக இருக்கும் மூன்று பெண் ரவுடி கேரக்டர்களை ‘தலைநகரம்—3’-க்காக சாமர்த்தியமாக தயார்படுத்தியிருக்கார் துரை.

இசை, ஒளிப்பதிவு, ஸ்டண்ட் சீக்வென்ஸ் எல்லாமே நன்றாகவே கைகூடி வந்திருந்தாலும் ‘சதக் சதக்’ கத்திக்குத்துகளும் ரத்தச் சகதியும் கொஞ்சம் ஓவர் தான்.

–மதுரைமாறன்

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.