திருச்சியில் தெரு நாய்களை சுட்டுக்கொன்ற ஓய்வு பெற்ற பேராசிரியர் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தெரு நாய்களை சுட்டுக்கொன்றதாக ஓய்வு பெற்ற பேராசிரியர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி கருமண்டபம், குறிஞ்சி தெருவைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 60). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அரசு உரிமம் பெற்று ஏர்கண் எனப்படும் இரட்டைக் குழல் துப்பாக்கி வைத்துள்ளார்.

திருச்சியில் டைட்டானிக் கப்பலா ? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான பொருட்காட்சி !

மக்களுடன் மண்ணச்சநல்லூர் S.கதிரவன் ! நம்ம வீட்டு எம்.எல்.ஏ. !

அந்த பகுதியில் தெருநாய்களின் தொந்தரவு அதிகமா இருக்கிறது என்றும், அந்த பகுதி மக்கள் வெளியே நடமாடவே பயந்து இருந்த நிலையில் 24.08.2023 அன்று அவர் ஒரு தெரு நாயை சுட்டதாகவும், அந்த நாய் காலில் காயத்துடன் தப்பிச்சென்றதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் அவசர எண் 100-ஐ தொடர்பு கொண்டு புகார் செய்தார்.

அதன்பேரில் கண்டோன்மெண்ட் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் ஏற்கனவே 2 தெரு நாய்களை சுட்டு கொன்றதாக தெரியவந்தது. உடனே சிவக்குமாரை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.