திருச்சி கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய 15 வயது சிறுவன் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய 15 வயது சிறுவன்! தீவிரமாக தேடும் தீயணைப்பு படையினர் !

கொள்ளிடம் ஆற்றில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற மாணவன் ஆற்றில் மூழ்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மலைக்கோட்டை, சறுக்குப்பாறை தாயுமானவர் சந்து, திருவேங்கட சுப்பிரமணியன் என்பவரது மகன் ஆதி ஸ்ரீ ஹரிஹரசுதன் (வயது 15). இவர், கீழ தேவதானம் கோட்டை, UDV பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்றுவருகிறான்.

துணை முதலமைச்சர் உதயநிதி வாழ்த்து

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இந்நிலையில், சக நண்பர்கள் ஆறு பேருடன் கொள்ளிடம் ஆற்றுக்கு இன்று மதியம் 3 மணியளவில் குளிக்கச் சென்றுள்ளனர். யாத்ரி நிவாஸ் எதிரே உள்ள திருவானைக்கோவில் அழகிரி புரம் அருகே கொள்ளிடம் ஆற்றில் குளிப்பதற்காக இறங்கியுள்ளனர். நண்பர்களுடன் நீண்டநேரமாக குளித்துக்கொண்டிருந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆதி ஸ்ரீ ஹரிஹரசுதன் என்ற மாணவன் மட்டும் ஆழமான பகுதிக்கு சென்றதால் ஆற்றில் மூழ்கியுள்ளான். இதனை கண்டு பதறிப்போன மற்ற 5 பேரும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்களுக்கும் உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, மாலை 5.30 மணி முதலாக தீயணைப்புத் துறையினர் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி மூழ்கிபோன மாணவன் ஆதி ஸ்ரீ ஹரிஹரசுதனை தீவிரமாக தேடி வருகின்றனர். தேடுதல் பணியை மேற்பார்வையிட்டு துரிதப்படுத்த மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் சம்பவ இடத்திற்கு விரைகிறார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

ஏற்கெனவே, ஸ்ரீரங்கம் ஸ்ரீமான் குருகுல மாணவர்கள் மூவர் ஆற்றில் மூழ்கி இறந்த அதே பகுதியில்தான் ஆதி ஸ்ரீ ஹரிஹரசுதனும் மூழ்கியிருக்கிறான். ஆழமான பகுதிகளை அடையாளம் கண்டு முறையான எச்சரிக்கை பலகைகளை நிறுவி இத்தகைய அசம்பாவிதங்களை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.