“நிஜ வாழ்க்கையில் சந்தித்த ஹீரோ யார் ?” -‘சந்திரமுகி -2’ விழாவில் ரகசியம் சொன்ன நடிகை !

0

                                              “நிஜ வாழ்க்கையில் சந்தித்த ஹீரோ யார் ?” -‘சந்திரமுகி -2’                                    விழாவில்  ரகசியம் சொன்ன நடிகை !

லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில் முன்னணி நட்சத்திர நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் தயாராகி வரும் ‘சந்திரமுகி 2’ எனும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட லைக்கா சுபாஷ்கரன் ராகவா லாரன்ஸ் ராகவா லாரன்ஸின் அறக்கட்டளைக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கினார்.

https://businesstrichy.com/the-royal-mahal/

இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாக தயாராகி வரும் திரைப்படம் ‘சந்திரமுகி 2’ இதில் ராகவா லாரன்ஸ், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், ‘வைகைப்புயல்’ வடிவேலு, மகிமா நம்பியார், லட்சுமிமேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருதினை வென்ற இசையமைப்பாளர் எம் எம் கீரவாணி இசையமைத்திருக்கிறார் தோட்டா தரணி கலை இயக்கத்தை கவனிக்க படத்தொகுப்பு பணிகளை ஆண்டனி மேற்கொண்டிருக்கிறார். ஆக்சன் காமெடி ஹாரர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது. ஜி.கே.எம் தமிழ் குமரன் தலைமை பொறுப்பு வகிக்க, இப்படத்தின் வெளியீட்டுப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 15ம் தேதியன்று வெளியாகவிருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை புறநகரில் அமைந்திருக்கும் தனியார் பொறியியல் கல்லூரியின் கலையரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில் பட குழுவினருடன் தயாரிப்பாளர் லைக்கா சுபாஷ்கரன், திருமதி பிரேமா சுபாஷ்கரன், சுபாஷ்கரனின் தாயார் ஞானாம்பிகை ஆகியோரும் கலந்து கொண்டனர். பாடல்கள், நடனம் என கோலாகலமாக இவ்விழா நடைபெற்றது.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

'சந்திரமுகி -2' விழாவில்
‘சந்திரமுகி -2’ விழாவில்

பாடலாசிரியர் மதன் கார்க்கி பேசுகையில், ” இப்படத்தின் பாடல்களை உருவாக்குவதற்காக மைசூரில் இசையமைப்பாளர் கீரவாணியுடன் தங்கினேன். ஒவ்வொரு பாடல் உருவான விதமும் சுவராசியமாகவும், மறக்க இயலாததாகவும் இருந்தது. அவருடைய அறைக்குச் சென்று கம்போசிங் தொடங்கலாமா? என கேட்டபோது, முதலில் என்னுடன் செஸ் விளையாடுங்கள் என்றார். இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, அவருடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அதன் பிறகு பாடல்களை குறுகிய கால அவகாசத்தில் உருவாக்கினார். அவருடைய மெல்லிசை பாடல்களுக்கு நான் மிகப்பெரிய ரசிகன்.

அவர் என்னிடமும், இயக்குநர் வாசு சாரிடமும் ஒரு விசயத்தை தெளிவுப்படுத்தினார். சந்திரமுகி 2 படத்தின் தமிழ் பதிப்பிற்கு சைதன்ய பிரசாத்தும், தெலுங்கு பதிப்பிற்கு மதன் கார்க்கியும் பாடல்கள் எழுதட்டும் என்றார். தெலுங்கு பதிப்பிற்கான தமிழ் பாடல்களை நான் எழுதினேன். தமிழ் பதிப்பிற்கான தெலுங்கு பாடல்களை சைதன்ய பிரசாத் எழுதினார். இது எனக்கு மிகப்பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. பாடலாசிரியர் சைதன்ய பிரசாத்துடன் இணைந்து நான் பல படங்களில் பணியாற்றி இருக்கிறேன்.

இயக்குநர் பி. வாசுவை மனதார பாராட்டுகிறேன். ஏனெனில் சந்திரமுகி படத்தின் முதல் பாகத்திற்கும், இரண்டாம் பாகத்திற்கும் வடிவேலுவைத் தவிர வேறு எந்த தொடர்பும் இல்லை. ஆனால் மிகவும் புத்திசாலித்தனமாக கதையையும், திரைக்கதையும் அமைத்து சந்திரமுகி 2 வை உருவாக்கி இருக்கிறார்.

கதையோட்டத்தின் சூழலுக்கு ஏற்ற வகையில் பாடல்கள் வெளியாவதில்லை என ஏராளமானவர்கள் ஆதங்கப்படுகிறார்கள். இந்தத் திரைப்படத்தில் எனக்கு அமைந்த ஒவ்வொரு பாடல்களும் அருமையான மெலோடி . அழகான சூழல். ஐந்து பாடல்களை எழுதி இருக்கிறேன். அனைத்துப் பாடல்களும் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என உறுதியாக நம்புகிறேன்” என்றார்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

நடிகை மகிமா நம்பியார் பேசுகையில், ” சந்தோஷமாக உணர்கிறேன். இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்ததற்காக இயக்குநர் பி. வாசுவிற்கும், லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளரான சுபாஷ்கரனுக்கும், மாஸ்டர் ராகவா லாரன்சுக்கும் நன்றி. படப்பிடிப்பு தளத்தில் வடிவேலு அண்ணா உள்ளிட்ட அனைவருடனும் பணியாற்றியது மறக்க இயலாத அனுபவம். ராகவா லாரன்ஸை பற்றி புகழ்ந்து பேசுவது அவருக்கு பிடிக்காது. இருந்தாலும் சிலவற்றை சொல்ல வேண்டும். அவர் அடிக்கடி சொல்லும் வார்த்தை ‘சர்வீஸ் இஸ் காட்’. சர்வீஸ் செய்பவர்கள் இறைவன் தானே..! நான் நிஜ வாழ்க்கையில் சந்தித்த ஹீரோ.. கடவுள்.. மாஸ்டர் ராகவா லாரன்ஸ் சார் தான். இப்போது நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். ” என்றார்.

'சந்திரமுகி -2' விழாவில்
‘சந்திரமுகி -2’ விழாவில்

நடிகை சுபிக்ஷா கிருஷ்ணன் பேசுகையில்,” சந்திரமுகி படத்தின் முதல் பாகத்திற்கு நான் மிகப்பெரிய ரசிகை. நிறைய நேர்காணல்களில் உங்களின் கனவு கதாபாத்திரம் என்ன? என கேட்கும் போது, சந்திரமுகியாக நடிக்க வேண்டும் என என் விருப்பத்தை தெரிவித்திருக்கிறேன். மனதில் எதைப்பற்றி உண்மையாக நினைத்துக்கொண்டிருக்கிறோமோ..! அது ஒரு காலத்தில் நடந்து விடும் என்பார்கள். அதனால் தான் நான் இந்த மேடையில் உங்கள் முன் நின்று கொண்டிருக்கிறேன்.

திரையுலகில் முதுகில் தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்துபவர்கள் குறைவு. தட்டிப் பறிப்பவர்கள் தான் அதிகம். உற்சாகப்படுத்துபவர்களில்.. மிகவும் குறைவானவர்களில் மாஸ்டர் ராகவா லாரன்சும் ஒருவர். படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றும்போது ஃபிட்னஸ் குறித்தும்… மோட்டிவேஷனல் குறித்தும்… கரியர் குறித்தும்…நடனம் குறித்தும்.. ஏராளமான பயனுள்ள தகவலை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

‘ஸ்வகதாஞ்சலி..’ பாடலில் கங்கணா மேடத்தின் அர்ப்பணிப்புடன் கூடிய ஈடுபாட்டை பார்த்து வியந்தேன். உங்களிடமிருந்து நிறைய விசயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என தோன்றியது. அவருடன் சக நடிகையாக பணியாற்றியதை பெருமிதமாக கருதுகிறேன். நிறைய தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

திரை உலகில் 45 ஆண்டுகளை நிறைவு செய்த ராதிகாம்மாவுடன் இணைந்து பணியாற்றியதும் மறக்க இயலாத அனுபவம். வடிவேலுவை சினிமாவில் பார்த்திருக்கிறேன். டிவியில் பார்த்திருக்கிறேன். ஆனால் ஒருபோதும் அவருடன் இணைந்து பணியாற்றுவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை. உங்களுடைய காமெடியை நேரலையாக உடனிருந்து பார்க்கும் போது கிடைத்த மகிழ்ச்சியான அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. அனைவரிடம் இணைந்து பணியாற்றியது என் கனவு நனவானது போல் உணர்கிறேன். அனைவருக்கும் நன்றி” என்றார்.

நடிகை சிருஷ்டி டாங்கே பேசுகையில், ” சந்திரமுகி படத்தின் முதல் பாகத்திற்கு மக்கள் கொடுத்த ஆதரவும், வரவேற்பும்.. சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்திற்கும் அளிக்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்.
இயக்குநர் பி. வாசு சார் என்னை பார்த்தவுடன், ஓகே நீ பிரியா கதாபாத்திரத்தில் நடி என்றார். அப்போதிலிருந்து ஆறு மாதம் வரை தொடர்ந்த இந்த சந்திரமுகியின் பயணம் என் வாழ்க்கையில் எப்போது மறக்க இயலாத வகையில் அமைந்தது. இந்த தருணத்தை நான் இப்போதும் கொண்டாடுவேன்.
வடிவேலு சாரை படப்பிடிப்பு தளத்தில் முதன்முதலாக பார்த்தபோது அவரிடம் சென்று நான் உங்களுடைய மிகப் பெரிய ரசிகை என்றேன். நான் சென்னைக்கு வந்து தமிழ் கற்றுக்கொண்டது அவருடைய படங்களை வீடியோவில் பார்த்து தான்.

கங்கணா ரனாவத் என்னுடைய ரோல் மாடல். நீங்கள் நடித்திருக்கும் படத்தில் நானும் நடித்திருப்பதை அதிர்ஷ்டமாகவும், பாக்கியமாகவும் கருதுகிறேன்.” என்றார்.

கலை இயக்குநர் தோட்டா தரணி பேசுகையில், ” நான் நிறைய படங்களில் பணியாற்றிருக்கிறேன். அதனால் இது ஒன்றும் புதிதல்ல. வாசு சாரை எனக்கு நீண்ட நாட்களாக தெரியும். அவர்தான் இந்த படைப்புக்கு கேப்டன். அவர் சொல்லும் விசயங்களை தான் நாங்கள் உருவாக்கித் தருகிறோம். அதை நான் மட்டும் தனித்து செய்வதில்லை. என்னுடைய மகள், என்னுடைய சகோதரர் மற்றும் என் உதவியாளர்கள் என ஏராளமான திறமையானவர்கள் எங்களுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார்கள். ” என்றார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.