செயின்ட் ஜோசப் கல்லூரியில் ‘செப்பர்ட்’ சமூகப்பணி ஆவணங்கள் மற்றும் மூலிகை தோட்டம் தொடக்க விழா!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

செயின்ட் ஜோசப் கல்லூரி விரிவாக்கத்துறை செப்பர்டின் 40 ஆண்டு கால சமூகப்பணிகளின் செயல்பாட்டு ஆவணங்களையும் மூலிகை தோட்டத்தையும்  புனிதப்படுத்தி தொடங்கிய வைக்கும் நிகழ்ச்சி விரிவாக்கத்துறையில் நடைபெற்றது.

 

கல்லூரியின் அதிபர் அருள்முனைவர் பவுல்ராஜ் மைக்கேல் சே ச இந்தியநாட்டின் உயர்கல்வித்துறையில்  பல்கலைகழக மானிய குழு பரிந்துரைக்கும் முன்பே சேசு சபை கல்வி நிறுவனம் முதன்முதலாக நமது கல்லூரியில் 1985 – ல்  விரிவாக்கல்வியை கட்டாய பாடமாக அறிமுகப்படுத்தியது இக்கல்விமுறை மாணாக்கர்களுக்கு சமூகப் மேம்பாட்டு பணிகளில் ஈடுப்படும் வாய்ப்பினை ஏற்படுத்தி சமூக மேம்பாட்டிற்கும் மாணாக்கர்களின் கற்றலுக்கும் முன் மாதிரியாக அமைந்துள்ளது என்றும் 40 ஆண்டு கால வரலாற்று ஆவணகளைப் பாராட்டி  ஆசியுரை வழங்கினார்

இந்த வார அங்குசம் வார இதழில்…

செயலர் அருள்முனைவர் ஆரோக்கியசாமி சேவியர் சே ச விரிவாக்கத்துறையில் கல்லூரி மாணாக்கர்களின் 40 ஆண்டு கால சமூகப்பணியின் மூலம் கிராம மற்றும் நகர்புற  ஏழை எளிய மக்களின் சமூக பொருளாதார மற்றும் விழிப்புணர்வு மேம்பாட்டிற்கு உறுதுணையாக அமைந்துள்ளது என்று வாழ்த்துரை வழங்கினார்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இந்த ஆவணங்ளை வடிவமைத்த பேரா ஹெர்மன் அவர்கள் விரிவாக்கத்துறையின் 40 ஆண்டு கால வரலாற்றை ஆவணப்படுத்துதலில் ஒருங்கிணைப்பாளர்களுடன் இணைந்து செயல்பட்டதை தனக்கு நல்வாய்ப்பாகவும் பெறுமையாகவும் இருந்தது என்று தனது கருத்தினை பகிர்ந்து கொண்டார்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

விரிவாக்கத்துறையின் இயக்குநர் அருள்முனைவர் சகாயராஜ் சே ச வந்தவர்களை வரவேற்றார் முடிவில் முதுநிலை ஒருங்கிங்ணைப்பாளர் லெனின் நன்றி கூறினார். ஒருங்கிணைப்பாளர் யசோதை இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

விரிவாக்கத்துறை ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயசீலன் ஜோசப் கிறிஸ்து ராஜா சுதாகர் இளங்நிலை உதவியாளர் அமலேஸ்வரன் ஆகியோர் இந்நிகழ்ச்சியை ஏற்பாட செய்திருந்தார்கள்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.