திருவிழாவில் தரைக்கடை போட்டால் தண்டக்கட்டணமா?

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட குழுமாயி அம்மன் திருவிழாவிற்காக போடப்பட்ட கடைகளில் தண்ட கட்டணம் என்ற பெயரில் மாநகராட்சி நிர்ணயித்த தொகையினை பதிவு செய்யாமல் ஒப்பந்ததாரர் தனக்கு தோன்றிய கட்டணத்தை நிர்ணயித்து கையினால் எழுதிக் கொடுத்து வசூல் செய்யும் முறை என்பது மாநகராட்சிக்கு மிகப்பெரிய வருவாய் இழப்பாக உள்ளது.

தண்ட கட்டணம் மேலும் கடைகளுக்கு நாளொன்றிற்கு ரூபாய் 250 முதல் 300 வரை வசூல் செய்யப்பட்டு வருகிறது. இது வியாபாரிகளுக்கும் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற கட்டண வசூல் ஆண்டு முழுவதும் மாநகரத்தில் பெரும்பகுதிகளில் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் வசூல் செய்து வருகிறார். ஆகவே உடனடியாக விசாரணை செய்து மாநகராட்சி நிர்வாகம் ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுத்து ஒப்பந்தத்தை ரத்து செய்யுமாறு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்குப் பகுதி குழு சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

இரா. சுரேஷ் முத்துசாமி
திருச்சி மாநகர் மாவட்ட துணைச் செயலாளர்

Comments are closed, but trackbacks and pingbacks are open.