போலியோவை முற்றிலும் ஒழிக்கும் வரை ரோட்டரி ஓய்வதில்லை !
அக்டோபர் 24 – உலக போலியோ ஒழிப்பு தினத்தை ரோட்டரி இன்டர்நேஷனலின் சார்பில் நாடெங்கும் அனுசரித்து வருகிறார்கள். ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 3000 சார்பில், திருச்சி மொராய்ஸ் கிளாரியன் வளாகத்தில் நடைபெற்ற போலியோ தின சிறப்பு கருத்தரங்கில், ரோட்டரி இன்டர்நேஷனலின் துணைத்தலைவர் எம்.எம்.எம். முருகானந்தம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்பித்தார். ரொட்டேரியன் ஆர்.விஜயாலயன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஆளுநர் ஆர்.பி.எஸ்.மணி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
”உலகத்தின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் போலியோவை முற்றிலுமாக ஒழிக்கும் வரை, நமது உறுதிப்பாட்டைப் புதுப்பிப்போம், தடுப்பூசி வழங்கும் பணிகளை வலுப்படுத்துவோம், ஒன்றிணைந்து செயல்படுவோம். ரோட்டரியின் பலமே அதன் தன்னார்வலர்கள்தான்; அவர்கள் மனிதாபிமான சேவைக்காகத் தங்கள் நேரம், திறமை மற்றும் அன்பை மனமுவந்து வழங்குகிறார்கள்.” என்பதாக குறிப்பிட்ட எம்.எம்.எம். முருகானந்தம் தனது பங்களிப்பாக 10 இலட்சம் நன்கொடையை வழங்கினார். அவரை தொடர்ந்து மற்ற நிர்வாகிகள் இணைந்து 10 இலட்சம் நன்கொடையையும் வழங்கினார்கள்.




Comments are closed, but trackbacks and pingbacks are open.