மனிதன் தெய்வமாகலாம் !

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

சிறிது நாட்களாக ஷீரடிபாபா பற்றிய குறுஞ்செய்தி, ஒன்று வலம் வந்துகொண்டிருக்கிறது. உச்சநீதி மன்றத்தில் இஸ்லாத்தின் அமைப்பு பாபாவை இஸ்லாமியர் என்று ஒப்புக்கொண்டுவிட்டது.

1918-ல் மறைந்த பாபாவிற்கு தேவையில்லாத விளம்பரம், முக்கியத்துவம் ஏன்? இந்து மத கடவுளின் அவதாரமா? இல்லை. இதிகாசங்களையும், புராணங்களையும் எழுதிய மனிதரா?

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

‘ஷீரடி பாபாவுக்கு’ தமிழகத்தில் பக்தர்கள் அதிகம். அவரை வழிபட நினைக்கின்ற வழிபட்டுக்கொண்டிருக்கிற மக்களுக்கு அவர் ஒரு தெய்வீக பார்வையில் இருந்து கொண்டிருக்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மை.

வியாழன் தோறும், ஒன்று கூடி பிரார்த்தனை மூலம் வழிபாடுகள் செய்யப்பட்டு, தியான வடிவில் மனமுருகி தனது துன்ப துயரங்களை சொல்லி வழிபட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதில் யாருடைய தூண்டுதலோ, முயற்சியோ எந்த மத அமைப்புகளோ முன்னின்று இயக்குவதாக தெரியவில்லை.

தமிழகமெங்கும் கிராமம் முதல் நகரம் வரை ஷீரடியாருக்கு கோவில் இல்லாத இடம் இல்லையன சொல்லலாம். சாதிமத பாகுபாடுகள் இல்லை. ஒதும் மந்திரங்கள் இல்லை. பலி இடும் படலங்கள் இல்லை. மனிதவடிவில் ஷீரடியாரை உருகி, வேதனையோடு குறைகளை சொல்லி வேண்டுபவர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டுதான் இருக்கிறது.

அவரின் உருவமின்றி வேறு எந்த மத போதகமோ, அர்ச்சனையோ இல்லை. அவரின் உருவத்தை செல்வந்தர்கள் தங்களது சாதிமத பேதமின்றி வாகனங்களில், வைத்துக்கொள்வதும், பலர் தன் பையில் வைத்துக் கொண்டிருந்தும் நாடு கண்டு கொண்டிருக்கிறது.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

பிறவியிலே அவர்கள் கூற்றுப்படி கொள்ளையராக இருந்திருக்கலாம். மனிதனை மனிதன் எப்படி அறிய முடியும்? ‘வால்மீகி’ மிகவும் பிரபல கொள்ளைக்காரன். ஆனால் அவன் எழுதிய ‘இராமாயாணம்’ இன்றும் பேசப்படுகிறது, ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

மாமனிதன் – ‘கம்பரால்’ – உருமாற்றம் ஆனது. நுனிமரத்தில் இருந்து கொண்டு, அடிமரத்தை வெட்டியவன் மகாகவி காளிதாசன். இந்து மத வரலாற்றில் நாம் வணங்கும் தெய்வங்களையே கொடுரமாக, ஏற்றுக்கொள்ளமுடியாத அளவு எல்லைத்தெய்வங்களாக உலா வருகிறார்கள்.

பலியும் வலியும் உண்டு. சில பிரார்த்தனைகளில் மக்கள் சாதி பேதம் பார்ப்பதில்லை. ‘நோய் வந்தால்’ மந்திரிக்க மசூதி நோக்கி சென்று கயிறு கட்டும் மக்கள். தீராத நோய்க்கு வோளாங்கண்ணி சென்று வணங்கி, சபதத்தை நிறைவேற்றும் மக்கள். எந்த மதமானாலும் எந்த மனிதனாலும் ‘நம்பிக்கை’ என்று ஒன்று உருவாகி விட்டால் தெய்வபலம் மொழி இனம் சாதி பார்க்காது.

உச்ச நீதிமன்றம் மக்களை இன்னாரை வணங்கு என்றோ, கூடாது என்றோ யாருக்கும் உத்திரவிட முடியாது. இந்துவாக பிறந்த கண்ணதாசன், ‘இயேசுகாவியம்’ படைத்தான் MM இஸ்மாயில் என்கிற நீதிபதி மாதிரி கீதா உபதேசமும், இந்து மத வரலாறும் யாரும் பேச முடியாது.

கிறிஸ்தவரனான பாடகர் யேசுதாஸ் ஐயப்ப பக்தர். மதங்களை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள் எல்ல இடங்களிலும் உண்டு. ஆனால், கடவுளாக தேர்வு செய்வது, ஏற்றுக்கொள்வது ஒரு சிலரைத்தான்.

‘ஷீரடிபாபா’ இஸ்லாமியர் என்று தெரிந்தே, தமிழ்மக்களும் பிற மாநிலமக்களும், ‘மனிதன் தெய்வமாகிவிட்டான்’ – என்றே நம்புகிறார்கள். இந்த நம்பிக்கைகளை உச்ச நீதிமன்றம் என்ன, யாரும் ஒன்றும் செய்து விடமுடியாது. உயரத்தில் இருந்து துப்புவதால் எச்சில் பன்னீராகாது.

மதுரை – P.அருணாசலம்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.