எஸ்.ஆர்.பிரபுவை காலி பண்ணிய கும்பல் !
எஸ்.ஆர்.பிரபுவை காலி பண்ணிய கும்பல்!
ட்ரீம்வாரியர் பிக்சர்ஸ் மற்றுமம் பொட்டன்ஷியல் ஸ்டுடியோ என்ற இரு பேனர்களில் சினிமா தயாரிப்பவர் எஸ்.ஆர்.பிரபு. வட்டிக்கு பைனான்ஸ் வாங்காமல் சொந்தப் பணத்தை போட்டு படம் எடுப்பவர்.
இப்படிப்பட்ட எஸ்.ஆர்.பிரபு கடந்த இரண்டு வருடத்தில் எடுத்த சுல்தான், கணம், ஃபர்ஹானா, ஹர்காரா, போலோ (கைதியின் இந்தி ரீமேக்), கார்த்தியின் ஜப்பான் என வரிசையாக ஆறு படங்கள் ப்ளாப் ஆனதால் செம் அப்செட்டில் இருக்கிறார் பிரபு. அதிலும் ஜப்பான் படத்தால் மட்டும் கிட்டத்தட்ட 15 கோடி ரூபாய் பணால் ஆனதால் படுஅப்செட்.
என்னாச்சு எஸ்.ஆர்.பிரபுவுக்கு? பெர்பெக்ட்டான ஆளு தானே? என ட்ரீம் வாரியர் சீனியர் ஒருவரிடம் கேட்டோம். எல்லாமே கெட்ட சேர்க்கையால் வந்த வினை தான்.
ரெண்டு வருஷத்துக்கு முன்னால வரைக்கும் டைரக்டரிடம் முழு கதையையும் மூணுவாட்டி கேப்பாரு. பக்காவா ஸ்கிரிப்ட் ரெடியான பிறகு ஷுட்டிங் போவாரு. பிளான் போட்ட ஷெட்யூலுக்குள் ஷுட்டிகை முடிப்பாரு.
ஆனா இப்ப சினிமாவுக்கே சம்பந்தமில்லாத ஒரு கும்பல் அவரிடம் நெருங்கி, வேறு பல நெருக்கங்களை காட்டிருச்சு. அவரும் அதுல விழுந்துட்டாரு.
உஷாரானால் தப்பிச்சாரு… இல்லேன்னா கோவிந்தா… கோவிந்தா தான்… என்றார் அந்த சீனியர் நிர்வாகி.
-மதுரை மாறன்