சாத்தூரில் ஊனமுற்றோருக்காக அரசு ஒதுக்கிய நிலங்கள் அடையாளம் காட்டப்படவில்லை என வேதனை!
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வெங்கடாசலபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், அரசு சார்பில் பல்வேறு பகுதியைச் சேர்ந்த ஊனமுற்றோருக்கான இலவச வீட்டு மனை பட்டா கடந்த 23/06/2023 ஆம் ஆண்டு 46 பயனாளிகளுக்கு அரசு நிலம் ஒதுக்கியுள்ளது, தற்போது ஒதுக்கிய அந்த நிலத்தை பிளாட் நம்பர் உள்ளிட்ட விவரங்களை நிலத்தை அளந்து உரிய பயனாளிகளுக்கு அடையாளம் காட்டப்படாமல் வருடக்கணக்கில் கணக்கில் கிடப்பில் போட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தற்போது அந்த நிலம் அடையாளம் காண முடியாத சூழ்நிலையில், முள்வேலிகள் சூழ்ந்துள்ளதால், தூய்மைப்படுத்தி உரிய பயனாளிகளுக்கு அடையாளம் காட்ட வேண்டும் என பலமுறை அதிகாரிகளுக்கு மனு செய்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும்,
தற்போது அந்த நிலத்தை நாங்களாகவே எங்கள் சொந்த முயற்சியில் தூய்மைப்படுத்தி முறையாக கிராம நிர்வாக அலுவலர் மற்றும் சர்வேயர் மூலம் உரிய பயனாளிகளுக்கு கிடைக்க முயற்சி செய்தபோது, அப்பகுதியைச் சேர்ந்த ஒரு நபர் நிலத்திற்குள் அனுமதிக்காமல் எங்களை மிரட்டி வருவதாகவும்,
எனவே உரிய நடவடிக்கை எடுத்து அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள இலவச வீட்டு மனை பட்டா நிலங்களை உரிய பயனாளிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என 20 கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் சாத்தூர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ராமநாதனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.மனுவை பெற்றுக் கொண்ட அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து அவர்களை அனுப்பி வைத்தார்.
— மாரிஸ்வரன்