“அனைவரின் உழைப்புக்கு கிடைத்த நல்ல வெற்றி” -‘லப்பர் பந்து ‘ தயாரிப்பாளர்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

கிராமத்து கிரிக்கெட்டை பின்னணியாக கொண்டு அதன் ஊடாக அழகான ஒரு காதல் கதையை இதில் சொல்லி இருந்தார் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து. இந்த இரண்டும் சேர்ந்து ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக நின்ற பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட படம் தொடர்பான அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக இந்தப் படத்தின் வெற்றி சந்திப்பு செப்டம்பர் 25 மாலை சென்னை கிரீன் பார்க் ஹோட்டலில் நடைபெற்றது.

இதில் பேசியவர்கள்… தயாரிப்பாளர் லக்ஷ்மண் குமார்

துணை முதலமைச்சர் உதயநிதி வாழ்த்து

“இயக்குநர் சொன்ன ஐடியா எங்களுக்கு பிடித்து போய் நட்சத்திரங்களிடம்  கூறியபோது அனைவருமே ஒரு ஈடுபாட்டுடன் இந்த படத்திற்குள் வந்தார்கள். ஒரு குழுவாக செட் ஆன போது மனதிற்கு நிறைவாக இருந்தது. இந்த படத்தில் நடித்த அனைவருக்குமே இது ஒரு பெயர் சொல்லும் படமாக அமைந்ததில் மகிழ்ச்சி. பத்திரிகையாளர்களும் ரசிகர்களும்  ஏகோபித்து ஆதரித்த படமாக இதை பிரின்ஸ் பிக்சர்ஸில் இருந்து கொடுத்தது ரொம்பவே மனதுக்கு நிறைவாக இருக்கிறது. இது வெறுமனே ஒரு ஸ்போர்ட்ஸ் படம் அல்ல. இதற்குள் மனித உணர்வுகளை காதல் கலந்து சொல்லும் போது எந்த அளவிற்கு சொன்னால் அது சுவாரசியமாக இருக்கும் என்பதை உணர்ந்து இதை உருவாக்கினோம். பார்ப்பதற்கு எளிதாக இருந்தாலும் இதன் உருவாக்கும் பணி கடினமாக இருந்தது. பத்திரிக்கையாளர்களின் பாராட்டுடன் இதை தியேட்டர்களில் ரசிகர்களுக்கு எடுத்துக்கொண்டு நம்பிக்கையுடன் சென்றபோது அவர்கள் கொடுத்த வரவேற்பும் எங்களை உற்சாகப்படுத்தியது. என்னுடைய எல்லா படங்களுக்கும் எனக்கு பின்னணியில் தூணாக இருப்பது என்னுடைய இணை தயாரிப்பாளர் வெங்கடேஷ். அவருக்கும் இந்த இடத்தில் நன்றி சொல்லிக் கொள்கிறேன். இரண்டு ஹீரோக்கள் என்கிற கதையில் எந்த ஈகோவும் இல்லாமல் குறித்த நேரத்தில் நடித்துக் கொடுத்த ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் உள்ளிட்ட அனைத்து நட்சத்திரங்களுக்கும் நன்றி”.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

பாடலாசிரியர் மோகன்ராஜன்

“அருண்ராஜா காமராஜின் ‘கனா’ படத்தில் நான் பாடல் எழுதியபோது அங்கே உதவியாளராக பணியாற்றியவர் தான் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து. நான் படம் பண்ணும் போது நிச்சயமாக உங்களை கூப்பிடுவேன்.. அப்போது நீங்கள் எனக்கு பாடல் எழுதி தர வேண்டும் என்று கூறியிருந்தார். இயக்குநர் கூறிய காட்சிகளை மனதில் நிறுத்தி என்னால் அழகாக பாடல் வரிகளை எழுத முடிந்தது. குட் நைட், லவ்வர் என தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்தி வருகிறார் இயக்குனர் ஷான் ரோல்டன். இன்று எனது பிறந்தநாள் என்பதால் இந்த வெற்றியை எனது பிறந்தநாள் பரிசாக எடுத்துக் கொள்கிறேன்”.

 

கலை இயக்குனர் வீரமணி கணேசன்

“இந்த படத்தின் ஸ்கிரிப்ட்டை 5 மணி நேரம் படித்தேன். படித்து முடித்ததுமே நிச்சயமாக இந்த படம் ஹிட் என இயக்குநரிடம் கூறினேன். அவர் வரிகளில் என்ன எழுதி இருந்தாரோ அதை அப்படியே காட்சியில் கொண்டு வந்துள்ளார்” என்று கூறினார்.

படத்தொகுப்பாளர் மதன்

“தயாரிப்பாளர் என்னை அழைத்து இயக்குநரிடம் சென்று கதை கேளுங்கள் என கூறினார். நான் இயக்குநரிடம் எனக்கு முழு கதை வேண்டாம் படத்தின் லைன் மட்டும் சொல்லுங்கள் என்னுடைய ஸ்டைல் கொஞ்சம் வேறு மாதிரி இருக்கும் என்று சொன்னேன். இயக்குநர் உங்களுக்கு எது வசதியோ அதை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். எங்கள் இருவருக்குமே கிரிக்கெட் ரொம்ப பிடிக்கும் என்பதால் எளிதாக ஒன்றிணைந்து பணியாற்ற முடிந்தது. எங்கள் இருவருக்கும் கிரிக்கெட் பிடிக்கும் ஆனால் கிரிக்கெட் பிடிக்காதவர்கள் கூட இந்த படத்தை பார்த்தால் ரசிக்க வேண்டும் என்கிற கண்ணோட்டத்தில் தான் இதை உருவாக்கினோம். நான் சொன்ன சில ஆலோசனைகளை பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டு படத்தொகுப்பின் போது துணிந்து க்ளைமாக்ஸை மாற்றினார் இயக்குநர்”.

நடிகை தேவதர்ஷினி

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

“ஒரு அழகான படம் எப்படி சென்றடைய வேண்டுமோ அதே போல சென்றடைந்து இருக்கிறது. இந்த படத்தில் குடும்பம், காதல், விளையாட்டு என எல்லாமே இருந்தாலும் என்னைப் பொறுத்தவரை இந்த படத்தின் அடிநாதம் என்பது காதல், ரொமான்ஸ் தான். அதை ரொம்பவே அழகாக வித்தியாசமான கோணத்தில் காட்டி இருக்கிறார் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து. ஹீரோயினைத் தாண்டி அவரது அம்மாவிற்கும் இந்த படத்தில் ரொமான்ஸ் வைத்து இருந்தது தான் செம க்யூட். நடுத்தர வயது ரொமான்ஸ் பெரும்பாலான படங்களில் பார்க்க முடியாது. இதில் அழகாக காட்டியதற்காக நன்றி. படப்பிடிப்பின்போது இயக்குநரிடம் சில வசனங்களை சேர்த்துக் கொள்ளலாமா என கேட்பேன். முதலில் ஸ்கிரிப்ட்டில் இருப்பதை பேசி விடுங்கள். அதன் பிறகு பார்க்கலாம் என்பார். ஆனால் கடைசியாக அவர் என்ன எழுதியிருந்தாரோ அதைத்தான் படத்தில் கொண்டு வந்திருக்கிறார். அதை பார்க்கும்போது அவர் செய்தது தான் சரி என்று தோன்றியது”.

நடிகை சுவாசிகா

“16 வருடத்திற்கு முன்பு தமிழில் நான் முதல் படம் பண்ணினேன். அப்போது பல கனவுகளுடன் இங்கே வந்தேன். ஆனால் எதுவும் நடக்கவில்லை. அதனால் கேரளாவுக்கு சென்று விட்டேன். இத்தனை வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழில் இப்படி ஒரு படம் மூலம் கம்பேக்  கிடைத்ததில் ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.  இரண்டாவது இன்னிங்ஸ் போல இதை உணர்கிறேன். தயாரிப்பாளர், இயக்குனர் யாருக்கும் என்னைப் பற்றி அவ்வளவாக தெரியாது. ஆனாலும் எப்படி என்னை நம்பி இந்த கதாபாத்திரத்தை கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. இன்னும் நிறைய தமிழ்ப் படங்கள் பண்ண வேண்டும். இங்கேயே வீடு கட்டி செட்டில் ஆக வேண்டும்.

எனக்கு புதிய வாழ்க்கை கொடுத்ததற்கு மொத்த படக்குழுவிற்கு நன்றி”.

இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து

“இந்தப் படத்திற்கு லப்பர் பந்து என்கிற டைட்டில் பொருத்தமாக இருக்கிறது என எல்லோரும் சொன்னார்கள். ஆனால் முதலில் இதை வைத்தபோது எனக்கு பிடிக்கவில்லை. எனது உதவி இயக்குனர்கள் தான் இந்த டைட்டிலை கொடுத்தார்கள். அட்டக்கத்தி தினேஷிடம் இந்தப் படத்தின் கதையை சொல்ல ஆரம்பித்த போது படத்தில் அவருக்கு 40 வயது என்றும் அவருக்கு சஞ்சனா மகள் என்றும் கூறிய போது நான் எதிர்பார்த்த அளவிற்கு அவர் அதிர்ச்சி அடையவில்லை. அதன் பிறகு இன்டர்வெல் மற்றும் க்ளைமாக்ஸ் காட்சியை மட்டும் சொல்லு என கேட்டவர் உடனடியாக ஒப்புக்கொண்டார். தயாரிப்பாளர் லஷ்மணிடம் நான் முதலில் கொண்டு சென்ற கதை ஒரு ரொமாண்டிக் காதல் கதை. அப்படி சொன்னதுமே அவர் வேண்டாம் என கூறிவிட்டார். அவர் எதிர்பார்த்தது வாழ்வியல் சார்ந்த ஒரு கிராமத்து கதையை. அதன் பிறகு தான் இந்த லப்பர் பந்து கதையை ஒரு 20 நிமிடம் கூறினேன்.. சில நாட்களில் கூப்பிடுவதாக கூறினார். இரண்டரை மணி நேரம் கதை கேட்டு கட்டிப்பிடித்து பாராட்டியவர்களே என்னை கூப்பிடவில்லை. இவர் எங்கே கூப்பிடப் போகிறார் என்று சந்தேகம் இருந்தது. அவரது தண்டட்டி படம் பூஜை போட்ட போது என்னையும் அழைத்து அன்றைய தினமே எனது அடுத்த படத்திற்கு நீ தான் டைரக்டர் என்று ஒப்பந்தம் போட்டு விட்டார்”.

நாயகன் ஹரிஷ் கல்யாண்

“பொதுவாக ஒவ்வொரு படத்திற்கும் ரிலீஸுக்கு முன்னால் ஒரு பிரஸ்மீட் நடக்கும். அதற்கு பின்னால் ஒரு சக்சஸ் மீட் நடக்குமா எனத் தெரியாது. ஆனால் இந்த படத்திற்கு நாங்கள் பிரஸ்மீட் வைக்கவில்லை. இப்போது சக்சஸ் மீட் வரை வந்துள்ளோம். அந்த வகையில் இது எனக்கு  ஸ்பெஷல் மேடை.

இந்த படம் ஹிட்டாகும் என தெரியும். ஆனால் இந்த அளவிற்கு கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கவில்லை. இந்த பெருமை எல்லாம் எங்களது கேப்டன் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்துவுக்கு தான் சேரும். கிரிக்கெட் கதையிலும் கிராமத்து கதையிலும் நடிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. இரண்டுமே இந்த ஒரே படத்தில் நிறைவேறியது அதிர்ஷ்டம் தான். அதற்கு தயாரிப்பாளர்கள் லக்ஷ்மண்  மற்றும் வெங்கடேஷ் ஆகியோருக்கு நன்றி சொல்ல வேண்டும்”.

 

–மதுரை மாறன்

 

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.