அங்குசம் பார்வையில் ‘சட்டம் என் கையில்’ திரை விமர்சனம்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தைக்களம் ஏற்காடு, இரவு நேரம். ஒரு சாலைவிபத்தில் பள்ளிச் சிறுமி ஒருத்தி பலியாகிறாள். அதன் பின்  இளம் பெண் ஒருத்தி ரவுண்டானா அருகே கொடூரமாக கொலை செய்யப்பட்டுக்கிடக்கிறாள். இந்த நேரத்தில் தான் சதீஷ் ஏற்காடு மலையை நோக்கி காரில் பயணிக்கிறார். எதிரே பைக்கில் வந்த இளைஞன் மீது சதீஷின் கார் மோதி விபத்துக்குள்ளானதில் குற்றுயிரும் குலையுருமாக சாலையில் விழுகிறான்  ஹெல்மெட் அணிந்த அந்த இளைஞன். பயத்தில் நடுங்கும் சதீஷ், அந்த இளைஞனின் உடலை கார் டிக்கியில் போட்டுக் கொண்டு பயணிக்கிறார்.

அப்போது இரவு நேர செக்கிங்கில் இருக்கும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஷா [ பாவெல் நவகீதன் ] விடம் மாட்டுகிறார். கார் டிக்கியில் பிணம் இருப்பது தெரியாமலேயே ‘டிரங்க் & டிரைவ்’ கேஸில் ஸ்டேஷனுக்கு கொண்டு போகிறது போலீஸ். அதன் பின் சதீஷுக்கும் போலீசுக்குமிடையே நடக்கும் சூப்பர் க்ரைம் த்ரில்லர் ஆட்டம் தான் இந்த ‘சட்டம் என் கையில்’.

Sri Kumaran Mini HAll Trichy

பெர்ஃபெக்டான க்ரைம் கதைக்குள் தன்னைக் கச்சிதமாக புகுத்திக் கொண்டு, பெரும்பாலான சீன்களில் போலீஸ் ஸ்டேஷனுக்குள் உட்கார்ந்தபடியே பல வெரைட்டிகளில் தனது பெர்ஃபாமென்ஸை வெளிப்படுத்தியிருக்கிறார் சதீஷ். கதாநாயகன் என்ற தீக்குழிக்குள் இறங்கும் விஷப்பரிட்சைக்கு  முயற்சிக்காமல் கதையின் நாயகனாக சதீஷை பூக்குழிக்குள் இறக்கியிருப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார் டைரக்டர் சாச்சி. இவர் சதீஷ் மனைவியின் சகோதரர். மலை ஏறினாலும் மச்சான் துணை வேணும் என சொல்வார்கள். அதனால் மச்சான் சாச்சி துணையுடன் ஏற்காடு மலை மீது நம்பிக்கையுடன் ஏறியிருக்கிறார் சதீஷ்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

சப்-இன்ஸ்பெக்டர் பாஷாவாக வரும் பாவெல் நவகீதன் ஆரம்பத்தில் டெரராக   வந்து க்ளைமாக்சில் நல்லவராக மாறுவது செம ட்விஸ்ட். அதே போல் இன்னொரு  சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜாக வரும் அஜய்ராஜ் கேரக்டர், நேரெதிராக மாறுவதும் ஸ்கிரிப்டின் பிரிலியண்ட். மேற்படி இருவருக்குள்ளும் நடக்கும் ஈகோ யுத்தத்திற்கு க்ளைமாக்சில் கரெக்டாக கனெக்டாவதற்கு இந்த ட்விஸ்டுகளை செமத்தியாக மேட்ச் பண்ணியிருக்கார் டைரக்டர் சாச்சி. கடைசி அரை மணி நேரம் வந்தாலும் மைம் கோபியின் பிரெசெண்ட் டபுள் ஓகே.

Flats in Trichy for Sale

சிறுமியை சாலை விபத்தில் சாகடித்தது யார் ? இளம் பெண்ணை படுகொலை செய்தது யார் ? கார் மீது மோதி  செத்த இளைஞனை தனது கார் டிக்கியில்  போட்டுக் கொண்டு, வேண்டுமென்றே சதீஷ் போலீசிடம் மாட்டுவது ஏன்? என்ற கேள்வி முடிச்சுகளுக்கான விடையை க்ளைமாக்சை நோக்கி கதையை  கொண்டு செல்ல வைத்து புத்திசாலித்தனமாக முடித்திருக்கிறார் டைரக்டர். என்ன ஒண்ணு படம் ஆரம்பித்து பத்தாவது நிமிடத்திலிருந்து இடைவேளை வரை போலீஸ் ஸ்டேஷனுக்குள்ளேயே காட்சிகள் தேங்கி நின்றுவிடுவது  சலிப்பூட்டுகிறது. அதே போல் படத்தின் ஆரம்பத்தில் வரும் இளைஞனின் லாக்-அப் டெத் சீன் எதுக்குன்னு தான் நமக்குப் புரியல.

மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்கு இலவசமாக கல்வி கற்றுக் கொடுக்கும் சமூகப்பற்றாளராக, கொல்லப்படும் இளம் பெண் நிவேதாவாக, சதீஷின் தங்கையாக வரும் ரித்திகாவுக்கு சீன்கள் குறைவு என்றாலும் நடிப்பில் ஓரளவு நிறைவு.

படத்தில் நான்கைந்து சீன்கள் தவிர, மற்ற எல்லாமே இரவு நேரம் அதுவும் ஏற்காடு மலைப்பகுதி என்பதால் சிரத்தையுடன் கடின உழைப்பைக் கொடுத்துள்ளார் கேமராமேன் பி.ஜி.முத்தையா. க்ளைமாக்சில் வரும் சோகப்பாடலில் மிளிரிகிறார் இசையமைப்பாளர் எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட்.

   —  மதுரை மாறன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.