தூத்துக்குடி புத்தக திருவிழா – விழிப்புணர்வு ஒட்டு வில்லைகளை ஒட்டினார் எம் பி. கனிமொழி !
தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச்செயலாளரும், திமுக நாடாளுமன்றக் குழு தலைவருமான திருமிகு.கனிமொழி கருணாநிதி எம்பி அவர்கள். அதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில், வருகிற அக்டோபர் 3-ஆம் தேதியில் இருந்து 13 ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் தூத்துக்குடி புத்தக திருவிழா, நெய்தல் கலைவிழா, புகைப்பட கண்காட்சி ஆகியவற்றை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேருந்துகளின் முன்பகுதியில் ஒட்டு வில்லைகளை ஒட்டினார்!
உடன், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான திருமிகு.கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் திரு.இளம் பகவத் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆல்பர்ட் ஜான், மாநகராட்சி மேயர் திரு.ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் திரு.மதுபாலன், துணை மேயர் திருமிகு.ஜெனிட்டா செல்வராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.